Advertisment

பிளே-ஆஃப்க்குள் நுழைந்த ஐதராபாத்...அனல் பறக்கப் போகும் ஆர்.சி.பி - சி.எஸ்.கே மோதல்; 2 அணிகளும் என்ன செய்யணும்?

மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் ஐதராபாத் - குஜராத் ஆகிய அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

author-image
WebDesk
New Update
Hyderabad in playoffs RCB vs CSK to shootout for final qualifying spot over weekend Tamil News

கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து ஐதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

IPL 2024 | Chennai Super Kings | Royal Challengers Bangalore | Sunrisers Hyderabad: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வியாழக்கிழமை ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெறவிருந்தது. 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL’s southern sizzle: Hyderabad in playoffs; RCB vs CSK to shootout for final qualifying spot over weekend

இந்த போட்டிக்கு முன்னதாக மழை வெளுத்து வாங்கிய நிலையில், போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதனால், மொத்தமாக 15 புள்ளிகளை பெற்ற ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

கொல்கத்தா , ராஜஸ்தான் அணிகளை தொடர்ந்து ஐதராபாத் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதேபோல், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளை தொடர்ந்து,  14 போட்டிகளில் 12 புள்ளிகளை பெற்ற குஜராத் மூன்றாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் தொடரில் இருந்து வெளியேறியது.

ஆர்.சி.பி பிளே-ஆஃப்க்கு செல்ல என்ன செய்ய வேண்டும்? 

இந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்துக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு மத்தியில் மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. 

பெங்களூரு அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற வேண்டும். அந்த அணி பிளே-ஆஃப்க்கு தகுதி பெற உள்ள ஒரே வழி, சென்னையை குறைந்தபட்சம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களில் ( 11 பந்துகள் மீதம் வைத்து) வெற்றி பெறுவதுதான். 

பெங்களூருவின் நெட் ரன்ரேட் +0.387 ஆகவும், சென்னையின் நெட் ரன்ரேட் +0.528 ஆகவும் இருக்கும் நிலையில், வெறும் வெற்றி மட்டும் பெங்களூரு அணிக்கு உதவாது. ஏனெனில் அது அவர்களை ஐதராபாத் (+0.406) மற்றும் சென்னைக்கு கீழே வைத்திருக்கும். 

ஆர்.சி.பி-யிடம் தோற்றாலும் சி.எஸ்.கே பிளே-ஆஃப்க்கு தகுதி பெறுமா? 

ஆம், நிச்சயமாக  பிளே-ஆஃப்க்கு தகுதி பெறலாம். அதற்கு சென்னை அணி பெங்களூருவுக்கு எதிராக மோசமான தோல்வியைத் தவிர்க்க வேண்டும். இப்போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் பிளேஆஃப் சுற்றில் அவர்களுக்கு ஒரு இடம் உறுதியாகிவிடும். அத்துடன், சென்னை அணியால் முதல் 2 இடத்துக்குள் முன்னேறும் சூழல் கூட உள்ளது. அதற்கு, ராஜஸ்தான் கொல்கத்தாவிடம் தோற்ற வேண்டும். மேலும், ஐதராபாத் பஞ்சாபிடம் தோற்ற வேண்டும் அல்லது மழை காரணமாக போட்டி கைவிடப்பட வேண்டும். 

இதுஒருபுறமிருக்க, பெங்களூருவில் நாளை சனிக்கிழமை நடைபெறும் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால், அது சென்னை அணி ரசிகர்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். அப்படி நடந்தால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைக்கும். அது பெங்களூரு அணியை சென்னைக்கு கீழே வைத்திருக்கும். ஒருவேளை, சென்னை தோற்றால், தோல்வியின் வித்தியாசம் 17 ரன்களுக்கு அருகில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

உதாரணமாக, பெங்களூரு அணி ஸ்கோர் 200 என்றால், சென்னை அணி குறைந்தபட்சம் 182 ரன்களை எடுக்க வேண்டும். பெங்களூரு சேசிங் செய்தால் 18.1 ஓவர்களுக்குள் தோல்வியடையாமல் இருப்பதை சென்னை உறுதி செய்ய வேண்டும். இது சென்னை அணியின் நெட் ரன்ரேட்டை பெங்களூருவுக்கு மேலே வைத்திருக்க உதவும். 

நடப்பு சாம்பியனான சென்னை மீண்டும் பிளே-ஆஃப்க்கு திரும்புமா? அல்லது கடைசி 5 போட்டிகளில் அதிரடியாக வெற்றிகளை குவித்து வரும் பெங்களூரு அதன் ஆதிக்கத்தை தொடர்ந்து பிளே-ஆஃப்க்கு முன்னேறுமா? என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Super Kings Sunrisers Hyderabad Royal Challengers Bangalore IPL 2024
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment