Advertisment

அஷ்வின் ப்ளேயிங் லெவனில் இல்லாததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை; சச்சின் டெண்டுல்கர்

ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் ஐந்து இடது கை பேட்டர்கள் இருந்த போதிலும், அஷ்வின் இடம் பெறாதது வருத்தம்; சச்சின்

author-image
WebDesk
Jun 11, 2023 21:55 IST
Ashwin-and-Sachin

சச்சின் டெண்டுல்கர் (இடது) WTC இறுதிப் போட்டியில் விளையாடும் XI இல் இருந்து ஆர் அஷ்வினை நீக்கியதற்காக அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தி தெரிவிக்கிறார். (AP | PTI)

ஓவலில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆடும் லெவன் அணியில் இருந்து ஆர்.அஸ்வின் நீக்கப்பட்டதை இந்திய அணியின் முன்னணி வீரர் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் 5-வது நாளில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையும் படியுங்கள்: ஷுப்மன் கில்-க்கு அநியாயம்: தவறான கேட்ச்-க்கு அவுட் கொடுத்த அம்பயர்கள்

இந்தநிலையில், "தற்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று சச்சின் ட்விட்டரில் எழுதினார்.

ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் ஐந்து இடது கை பேட்டர்கள் இருந்த போதிலும், அஷ்வின் இடம் பெறாத அணி நிர்வாகத்தின் முடிவு குறித்து சச்சின் வருத்தம் தெரிவித்தார்.

"போட்டிக்கு முன்பு நான் குறிப்பிட்டது போல், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதுமே டர்னிங் டிராக்குகளை (திருப்பம் ஏற்படுத்தும் பிட்ச்கள்) நம்பி இருப்பதில்லை, அவர்கள் பந்து வீசும்போது நிலவும் காற்று மற்றும் பிட்ச்சில் உள்ள பவுன்சைப் பயன்படுத்தி பவுலிங்கில் வேறுப்பாட்டை காட்டுவார்கள்" என்று சச்சின் கூறினார்.

"மறக்க வேண்டாம், ஆஸ்திரேலியாவின் முதல் 8 பேட்டர்களில் 5 இடது கை வீரர்கள் இருந்தனர்," என்று சச்சின் கூறினார்.

சதம் அடித்த டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டுக்களைத் தெரிவித்தார், அவர்களின் அற்புதமான 285 ரன்கள் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு அடித்தளத்தை உருவாக்கியது.

"வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துகள், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக சாய்க்க முதல் நாளிலேயே உறுதியான அடித்தளத்தை அமைத்தனர்," என்று அவர் கூறினார்.

“இந்தியா முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தில் நிலைத்திருக்க பெரிய அளவில் பேட் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்திய அணிக்கு சில நல்ல தருணங்கள் கிடைத்தன.” என்று சச்சின் கூறினார்.

எவ்வாறாயினும், 2021 இல் சவுத்தாம்ப்டனில் நியூசிலாந்திற்கு எதிரான முதல் உலக டெஸ்ட் இறுதிப் போட்டி உட்பட, உலக கோப்பையை வெல்லாமல் இந்தியா 10 ஆண்டுகளை கடந்துவிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Cricket #Ravichandran Ashwin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment