கோலி, வில்லியம்சனை பார்த்து பாடம் படிங்க..!' தீப்தி ஷர்மா சர்ச்சையில் பிரபல வீரர் கருத்து
Former West Indies fast bowler Ian Bishop verdict on the ongoing run out row Tamil News: தீப்தி சர்மா மன்கட் முறையில் அவுட் செய்தது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
News about Deepti Sharma - Ian Bishop in tamil: இங்கிலாந்து சுற்றுப்பயணமாக சென்ற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றியது.
Advertisment
இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
இந்நிலையில், இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணி மோதிய 3-வது மற்றும் கடைசி போட்டி, கடந்த சனிக்கிழமை, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இதில் இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 38 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது தனது 43-வது ஓவரை வீச வந்தார் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா. அவர் பந்து வீசியபோது பேட்டிங் திசையின் எதிர் முனையில் (நான்-ஸ்ட்ரைக்கரில்) இருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லீ டீனை ரன் அவுட் செய்தார். அதாவது, மன்கட் முறையில் அவுட் செய்து இருந்தார் தீப்தி சர்மா.
ஐ.சி.சி.யின் புதிய கிரிக்கெட் விதிகளின்படி, மன்கட் முறையில் அவுட் செய்வது தற்போது ரன் அவுட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இங்கிலாந்து மற்றும் மற்ற கிரிக்கெட் ஆடும் நாடுகளின் முன்னாள் வீரர்கள் பலரும் இதனை விமர்சித்து வருகின்றனர். மேலும் ‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ விவாதத்தையும் இந்த சம்பவம் தூண்டியுள்ளது. எனினும், இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவிற்கு ஆதரவாகவும் பல வீரர் வீராங்கனைகளும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இயன் பிஷப் கருத்து
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப்
இந்நிலையில், தீப்தி சர்மா மன்கட் முறையில் அவுட் செய்தது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர், பந்து வீச்சாளர்கள் பந்தை டெலிவரி செய்யும் வரை பந்து வீச்சாளர் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும், விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதில் சிறந்து விளங்கும் விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயன் பிஷப் தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில்,"எளிமையான மற்றும் சாதாரணமானது. விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் போல் நீங்கள் பந்து வீச்சாளர்கள் பந்தை டெலிவரி செய்யும் வரை அவர் மீது உங்கள் கண்களை வைத்திருங்கள். அப்படி செய்யும் போது இதுபோன்ற வாதங்கள் மறைந்துவிடும். இந்த இரண்டு சிறந்த வீரர்களைப் போல நம் இளம் வீரர்களுக்கு பேக்அப் செய்ய கற்றுக்கொடுப்போம்.
விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவது ஒரு திறமை. ஸ்பிரிண்ட் பந்தயத்தைப் போல வேகமான தொடக்கத்தைப் பெற, பேட்டர்கள் பந்து வீச்சாளர் பந்து வெளியீட்டை எதிர்பார்க்கிறார்கள் அல்லது அவர்கள் கவனக்குறைவாக இருக்கிறார்கள் அல்லது அவர்கள் நியாயமற்ற நன்மையைப் பெற முயற்சிக்கிறார்கள், அல்லது வெறும் சோம்பேறியாக இருக்கிறார்கள். எது எப்படியோ அது மன்னிக்க முடியாது." என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Plain and simple. Keep your eyes on the bowler and ball all the way through to ball release like Virat Kohli and Kane Williamson and these arguments go away. Let’s teach our young kids to back up like these two great players. https://t.co/PLJTfFGtNQ