Ian Healy on India vs Australia Tamil News: பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணி முதல் 2 டெஸ்டிலும் தோல்வியுற்று பரிதாப நிலையில் உள்ளது. இதனிடையே ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் குடும்ப சுகாதார பிரச்சினை காரணமாக நாடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, சுற்றுப்பயண போட்டிகளில் ஏன் விளையாடவில்லை என்று கேள்வியெழுப்பி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சியில் பேசிய அவர், “தொடரில் தோல்வியடைந்தற்கு நாங்கள் சுற்றுப்பயணப் போட்டியில் விளையாடவில்லை என்று என்னிடம் மீண்டும் சொல்லாதீர்கள். குறைந்தது இரண்டு பயிற்சி போட்டிகளிலாவது விளையாடி இருக்க வேண்டும். எனவே, டெஸ்ட் போட்டி வெற்றிக்கு குறுக்குவழிகள் இங்கு எதுவும் இல்லை.” என்று கூறியுள்ளார்.
மேலும், சுற்றுப்பயண ஆட்டங்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்திருக்கும் நன்மைகளை சுட்டிக்காட்டிய ஹீலி, “தேர்வுக்குழுவினர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டத்துடன் செல்வதை விட என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். கேப்டன் இந்திய குழப்பத்திற்கு அடிபணிய மாட்டார். மேலும் அதிக கட்டுப்பாட்டில் இருப்பார். அவர் அழுத்தங்கள் மற்றும் இந்த எதிர்ப்பு உங்களை எவ்வாறு எதிராளிகள் பேசுகிறார்கள் என்பதைப் பற்றி அறியத் தொடங்குகிறார்.
டேவிட் வார்னர் ஒன்று அல்லது இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடி இருந்தால், அவருக்கு தனது ஃபுட்வொர்க்கை செய்ய நேரம் கிடைத்திருக்கும். டி20 விளையாடிய அல்லது ஒரு மாதம் கிரிக்கெட் விளையாடாத வீரர்களும் அணியில் உள்ளனர். கம்மின்ஸ் அவர்களில் ஒருவர். இதேபோல் நாதன் லியானும் அவர்களில் ஒருவர், அவர் இந்த போட்டியில் இருந்து அதை அசைத்து காட்டினார். அவர் முதல் டெஸ்டில் தயாராக இல்லை என்பது நன்கு தெரிந்தது.” என்று கோரியுள்ளார்.

தொடர்ந்து பந்துவீச்சாளர்கள் பற்றி ஹீலி பேசுகையில், சுற்றுப்பயண விளையாட்டுகள் SG பந்தில் எப்படி பந்து வீசுவது என்பது பற்றிய அவர்களின் அறிவை மேம்படுத்தியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். “புதிய பந்தின் உணர்வைப் பெறுங்கள். அவர்கள் அங்கு வேறு ஒரு பந்தைப் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு SG பந்து, அது வழுக்கும் அல்லது பிடிமானதாக இருக்கலாம். அது எவ்வாறு செயல்படுகிறது, இந்த மெதுவான விக்கெட்டுகளுக்கு எந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் என்பதையெல்லாம் உணருங்கள். “
ஆஸ்திரேலிய அணியானது மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை விளையாடும் பழக்கம் இல்லை என்றும், அந்த சுற்றுப்பயணப் போட்டிகளின் போது, அவர்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை வருகை தரும் அணிகள் தீர்மானிக்கின்றன என்றும் ஹீலி சுட்டிக்காட்டினார்.
“மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடனும், குறைந்த வேகப்பந்து வீச்சாளர்களுடனும் விளையாடுவதை நாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற மார்ச் 1 ஆம் தேதி நடக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil