Advertisment

ஐசிசி 10 ஆண்டு கனவு அணிகள் அறிவிப்பு: கேப்டன் பதவிகளை அள்ளிய தோனி, கோலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ள 10 ஆண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளின் கனவு அணியில் இந்திய வீரர்கள் மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
ICC announces dream cricket team of the decade, icc, ஐசிசி, ஐசிசி 10 ஆண்டுகள் கனவு அணி, ஐசிசி கனவு அணி, தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, dream cricket team of the decade, icc announces dream team, ms dhoni icc dream team, icc dream team virat kohli, rohit sharma

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ள 10 ஆண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளின் கனவு அணியில் இந்திய வீரர்கள் மஹேந்திர சிங் தோனி, விராட் கோலி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனர்.

Advertisment

2020ம் ஆண்டு நிறைவடைவதையொட்டி, ஐசிசி பல நாடுகளின் சிறந்த கிரிக்கெட் வீரர்களைத் தேர்வு செய்து இந்த தசாப்தத்தின் (10 ஆண்டுகள்) ஒருநாள், டி20, டெஸ்ட் கனவு அணிகளை அறிவித்துள்ளது.

ஐசிசி ஞாயிற்றுக்கிழமை அறிவித்த கனவு அணியில், இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்ற தோனி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகள் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்து அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பையில் , இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனி 91 ரன்கள் அடித்து உலகக்கோப்பையை வென்றார். அதற்கு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையையும் வென்றார். தோனி இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐசிசி அறிவித்த கனவு அணியில் தோனி மாட்டுமில்லாமல், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. தற்போதைய இந்திய கேப்டன் கோலி சராசரியாக 50 க்கும் மேல் ரன்களை அடித்துள்ளார். இவர் நீண்ட காலமாக ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக மாறிய பின்னர், 2013 முதல் சிறப்பாக வெளியாடி வருகிறார்.

இதனிடையே, விராட் கோலி இந்த தசாப்தத்தின் டெஸ்ட் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். எம்.எஸ். தோனி 2014 இல் ஓய்வு பெற்ற பின்னர், தோனி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொடார். ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற அதே வேளையில் அணியை உருவாக்குவதில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார்.

ஜஸ்பிரீத் பும்ரா இந்த பந்தாண்டுகளின் டி20 கணவு அணியில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், , கிறிஸ் கெய்ல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் டி20 கணவு அணியின் முதல் 3 இடங்களில் இடம்பெற்றுள்ளனர். ஏபி டிவில்லியர்ஸுடன் நடுவரிசை ஆட்டக்காரராக சேர்க்கப்பட்டுள்ளார். இதில், கிளென் மேக்ஸ்வெல், பொல்லார்ட் ஆகிய இருவரும் ஆல் ரவுண்டர்களாக இடம்பெற்றுள்ளனர். பந்துவீச்சாளர்களாக பும்ராவுடன் லசித் மலிங்கா, ரஷீத் கான் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில், டிவில்லியர்ஸ் மற்றும் மலிங்கா இருவரும் இந்த தசாப்தத்தின் ஒருநாள் கனவு அணியிலும் இடம் பிடித்துள்ளனர். இந்த அணியின் தொடக்க வீரராக டேவிட் வார்னர் இடம்பெற்றுள்ளர். ஷாகிப் அல் ஹசன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆல்ரவுண்டர்களாக இடம்பெற்றுள்ளனர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இம்ரான் தாஹிரும் இடம்பெற்றுள்ளார்.

இந்த தசாப்தத்தின் டெஸ்ட் அணியில், “கேன் வில்லியம்சன், கோலி, ஸ்டீவ் ஸ்மித் இடம்பெற்றுள்ளனர். டேவிட் வார்னர் மற்றும் அலெஸ்டர் குக் ஆகியோர் தசாப்தத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர். , குமார் சங்கக்காரா பக்கத்தின் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ் அணியின் ஆல்ரவுண்டராகவும் ஏழாவது பேட்ஸ்மேனாகவும் இடம்பெற்றுளார். ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டுமே டெஸ்ட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இடம்பெற்றுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம்பிடித்து உள்ளனர்.

ஐசிசி அறிவித்துள்ள ஒருநாள், டி20, டெஸ்ட் கனவு அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் பட்டியல் வரிசைப்படி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஐசிசியின் கனவு ஒருநாள் அணி:

1. ரோஹித் சர்மா, 2. டேவிட் வார்னர், 3. விராட் கோலி, 4. ஏபி டி வில்லியர்ஸ், 5. ஷாகிப் அல் ஹசன், 6. எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) 7. பென் ஸ்டோக்ஸ், 8.மிட்செல் ஸ்டார்க், 9. ட்ரெண்ட் போல்ட், 10. ஸ்டுவர்ட் பிராட் 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்

ஐசிசியின் கனவு டி20 அணி:

1. ரோஹித் சர்மா, 2. கிறிஸ் கெய்ல், 3. ஆரோன் ஃபிஞ், 4. விராட் கோலி, 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. கிளென் மேக்ஸ்வெல் 7. எம்.எஸ்.தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்) 8. கைரோன் பொல்லார்ட், 9. ரஷீத் கான், 10. ஜஸ்பிரித் பும்ரா, 11. லசித் மலிங்கா

ஐசிசி கனவு டெஸ்ட் அணி:

1. ஆலஸ்டைர் குக், 2. டேவிட் வார்னர், 3. கேன் வில்லியம்சன், 4.விராட் கோலி (கேப்டன்) 5. ஸ்டீவ் ஸ்மித், 6. குமார் சங்கக்கரா ( விக்கெட் கீப்பர்), 7. பென் ஸ்டோக்ஸ், 8. ரவிச்சந்திரன் அஸ்வின், 9. டேல் ஸ்டெய்ன் 10. ஸ்டுவர்ட் பிராட், 11 ஜேம்ஸ் ஆண்டர்சன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Virat Kohli Cricket Ms Dhoni Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment