worldcup 2023 | india-vs-australia: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 19 ஆம் தேதி) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறும் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
அம்பயர்கள் யார் யார்?
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் நடுவர்களாக யாரெல்லாம் செயல்பட உள்ளார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள நடுவர்களாக ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோவும், போட்டி நடுவராக ஆண்டி பைகிராப்ட்டும், 3வது மற்றும் 4வது நடுவர்களாக ஜோயல் வில்சன் மற்றும் கிறிஸ் கேப்னி ஆகியோர் செயல்பட உள்ளார்கள்.
முக்கிய போட்டியில் கள நடுவர் ரிச்சர்ட் கெட்டில்பரோ நடுவராக களமிறங்குவது இது இரண்டாவது முறையாகும். 50 வயதான அவர் முன்பு 2015 இறுதிப் போட்டியில் குமார் தர்மசேனாவுடன் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா நியூசிலாந்தை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வாகை சூடியது.
எனினும் கெட்டில்பரோவின் நியமனம் இந்தியாவிற்கு நல்ல செய்தியாக இருக்காது. இந்தியா பங்கேற்கும் ஐ.சி.சி போட்டியின் நாக் அவுட் போட்டியில் அவர் நடுவராக செயல்படுவது இது முதல் முறை அல்ல. 2013ல் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா கடைசியாக ஐ.சி.சி பட்டத்தை வென்றதில் இருந்து, இந்தியா இதுவரை ஐ.சி.சி-யின் போட்டிகளில் 8 முறை நாக் அவுட் ஆகி வெளியேறியுள்ளது. இதில், 7 போட்டிகளில் கெட்டில்பரோ நடுவர்கள் குழுவில் இருந்துள்ளார்.
அவர் ஐந்து நாக் அவுட் இந்தியா போட்டிகளில் கள நடுவராக (ஆன்-பீல்ட் அம்பயராக) இருந்துள்ளார். 2014 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இலங்கைக்கு எதிராக, 2015 உலகக் கோப்பை அரையிறுதிக்கு எதிராக ஆஸ்திரேலியா, 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி பாகிஸ்தான், மற்றும் 2019 உலகக் கோப்பை அரையிறுதி vs நியூசிலாந்து மற்றும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியடைந்த இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளில் டிவி நடுவராக இருந்தார்.
2022 டி20 உலகக் கோப்பை அரையிறுதி இங்கிலாந்துக்கு எதிரான இந்தியாவின் ஒரே ஐசிசி நாக் அவுட் போட்டியில் மட்டும் தான் கெட்டில்பரோ நடுவராக பணிபுரியவில்லை. இருப்பினும், அந்த போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், அது இந்தியாவின் அதிர்ஷ்டத்தை மாற்றவில்லை.
இதேபோல் நடுவர் இல்லிங்வொர்த் இந்தியாவின் கடைசி 8 ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் மூன்றில் ஆன்-பீல்ட் அம்பயராக இருந்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி உலகக் கோப்பை அரையிறுதியின் போது இங்கிலாந்து ஜோடியான இல்லிங்வொர்த் மற்றும் கெட்டில்பரோ உண்மையில் கள நடுவர்களாக இருந்தனர்.
ஐ.சி.சி-யின் போட்டிகளில் நடுநிலை நடுவர்களைக் கட்டாயமாக்குகிறது. கடந்த 12 ஆண்டுகளில் ஐ.சி.சி நாக் அவுட் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் ஒருமுறை மட்டுமே சந்தித்துக்கொண்டதால், இங்கிலாந்து வீரர் மற்றும் ஐ.சி.சி எலைட் பேனல் அதிகாரிகளான இல்லிங்வொர்த் மற்றும் கெட்டில்பரோ ஆகியோர் இந்திய போட்டிகளின் போது மிகவும் பொதுவான நடுவர்களாக இருந்தனர்.
அனுபவம் வாய்ந்த நடுவர்கள்
நவம்பர் 2009ல் ஒரே நாளில் ஐ.சி.சி இன்டர்நேஷனல் பட்டியலில் பதவி உயர்வு பெற்ற இல்லிங்வொர்த் மற்றும் கெட்டில்பரோ இருவரும் இந்த வார அரையிறுதியின் போது கள நடுவர்களாக செயல்பட்டனர். நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் வெற்றியை இல்லிங்வொர்த் மேற்பார்வையிட்டார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆஸ்திரேலியாவின் திரில் வெற்றிக்கு கெட்டில்பரோ களத்தில் இருந்தார்.
இருவரும் ஐ.சி.சி-யின் ஆண்டின் சிறந்த நடுவருக்கு வழங்கப்பட்ட டேவிட் ஷெப்பர்ட் டிராபியின் முந்தைய வெற்றியாளர்களாக உள்ளனர்.
நெதர்லாந்து - இலங்கைக்கு எதிரான போட்டியில் நடுவராக 100 போட்டிகளை கெட்டில்பரோ எட்டினார். 2013 மற்றும் 2015 க்கு இடையில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் அவர் பரிசை வென்றுள்ளார். மேலும் இல்லிங்வொர்த் தனது பெயரை 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் புகழ்பெற்ற பட்டியலில் சேர்த்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.