2021-ல் தான் டி20 உலகக் கோப்பை: ஐசிசி ரிப்போர்ட் முழு விவரம்
ICC t20 world cup : இந்த கூட்டத்தில், உலகக் கோப்பை டி20 தொடரை எவ்வாறு நடத்துவது என்பது பற்றியும், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது
ICC t20 world cup : இந்த கூட்டத்தில், உலகக் கோப்பை டி20 தொடரை எவ்வாறு நடத்துவது என்பது பற்றியும், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது
மகளிர் உலகக் கோப்பை டி20 தொடரிலும் சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளோம்
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரை, இந்தாண்டில் நடத்தப்படுமா, நடத்தப்படும் என்றால் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரிய கூட்டம், நேற்று (ஜூலை 20ம் தேதி) மதியம் 03.30 மணியளவில் நடைபெற்றது.
Advertisment
இந்த கூட்டத்தில், உலகக் கோப்பை டி20 தொடரை எவ்வாறு நடத்துவது என்பது பற்றியும், இதனால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. அப்போது, உலகக் கோப்பை டி20 தொடரை அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்க வேண்டும் என அனைத்து நிர்வாகிகளும் வலியுறுத்தியுள்ளனர். நிர்வாகிகளின் முடிவுகளை ஏற்றுக்கொண்ட ஐசிசி தலைமை, அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்ட உலகக் கோப்பை டி20 தொடருக்கான அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கும் உலகக் கோப்பை டி20 தொடர் நவம்பர் மாதம் 14ஆம் தேதி முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தற்போது நிலவி வரும் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு கிரிக்கெட் தொடர்களில் சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளோம். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை டி20 தொடரை நடத்தத் தீர்மானித்துள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
மேலும், ‘மகளிர் உலகக் கோப்பை டி20 தொடரிலும் சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளோம். தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ள மகளிர் உலகக் கோப்பை டி20 தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறும். தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அட்டவணைப்படியே போட்டிகள் நடைபெறும்’ என்று கூறப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை டி20 தொடரைப் பாதுகாப்பாக நடத்துவதற்குப் பலவழிகளில் திட்டமிடப்பட்டதாகவும், இறுதியாக இத்தொடரை அடுத்த ஆண்டு நடத்துவதுதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளதாகவும் ஐசிசி கூறியுள்ளது. 2021-23ஆம் ஆண்டு வரை நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடர்கள் பற்றிய அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2021ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடர் அக்டோபரில் தொடங்கி நவம்பர் 14ஆம் தேதி முடியும். 2022ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை டி20 தொடர் அக்டோபரில் தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி முடியும்.
உலகக் கோப்பை டி20 தொடர் பற்றி ஐசிசி இறுதி முடிவு எடுத்த பின்பு மட்டுமே ஐபிஎல் தொடருக்கான அறிவிப்பு வெளியாகும் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. தற்போது, ஐசிசி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில், விரைவில் ஐபிஎல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil