Advertisment

WTC இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற உள்ள வாய்ப்புகள்...ஐசிசி பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை ஐசிசி பட்டியலிட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
ICC Test rankings Virat Kohli out of top 20 for first time in 10 years Tamil News

ஐசிசி பட்டியல்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை ஐசிசி பட்டியலிட்டுள்ளது. அதன்படி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற 4-1 அல்லது 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். 

Advertisment

3-2 அல்லது 2-2 என்ற கணக்கில் தொடர் முடிவுக்கு வந்தால் அடுத்து நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் வெற்றியை பொறுத்தே இந்தியாவுக்கு இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு அமையும் என ஐசிசி தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபாவில் ஸ்டேடியத்தில் இன்று டிச.14 இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கி நடக்கிறது. 

முதல் போட்டியை அதிரடியாக வென்ற இந்திய அணி, 2-வது போட்டியில் பெரும் பின்னடைவை சந்தித்தது.  முதல்  போட்டியை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா 2-வது போட்டி வென்ற நிலையில், சொந்த மண்ணில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த நினைக்கும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

Advertisment
Advertisement

இந்திய அணி சார்பாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ் குமார் ரெட்டி, ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் பாடிக்கல், ரவீந்திர ஜடேஜா, சர்பராஸ் கான், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஜோஷ் ஹேசில்வுட், பியூ வெப்ஸ்டர், ஜோஷ் இங்கிலிஸ், பிரெண்டன் டோக்லெட் சீன் அபோட் ஆகியோர் விளையாடிகின்றனர். 

இந்நிலையில் காபாவில் ஸ்டேடியத்தில் மழை பெய்து வருவதால் தொடர் ஆடுவதில் சற்று தாமதமும் நிலவுகிறது. ஆட்டமும் அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Vs Australia Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment