ICC Men's T20I Cricketer of the Year 2022 nominees; Suryakumar Yadav only indian player Tamil News
ICC Men's T20I Cricketer 2022, Suryakumar Yadav Tamil News: ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு 4 வீரர்களை சர்வேதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பரிந்துரை செய்துள்ளது. இதில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் இந்திய வீரர் சூரியகுமார் யாதவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவருடன் ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் வீரர் சாம் கர்ரான் மற்றும் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Advertisment
சூர்யகுமார் யாதவ் - இந்தியா
31 போட்டிகளில் 1164 ரன்கள்
Advertisment
Advertisement
இந்திய வீரரான சூர்யகுமார் யாதவ், 2022 ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரே வருடத்தில் 1000 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். அவர் 187.43 என்ற அசத்தலான ஸ்டிரைக் ரேட்டில் 1164 ரன்களை எடுத்து, அதிக ரன் எடுத்தவராக இந்த ஆண்டை முடித்தார்.
மேலும், டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் 68 சிக்ஸர்கள் அடித்துள்ளார். மற்றும் இந்த ஆண்டில் இரு சதங்கள் மற்றும் ஒன்பது அரை சதங்களுடன், யாதவ் சிறந்த 20 ஓவர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
ஆஸ்திரேலியாவில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பையில், அவர் ஆறு இன்னிங்ஸ்களில் மூன்று அரைசதங்களைப் பதிவு செய்தார். மேலும் போட்டியின் சராசரி 60 என்று 189.68 ஸ்ட்ரைக் ரேட்டில் இருந்தார்.
இந்த தொடருக்குப் பிறகும் சூர்யகுமார் தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்தார், நியூசிலாந்தில் நடந்த இருதரப்புத் தொடரில் அந்த ஆண்டில் டி20ஐகளில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். மேலும், 890 ரேட்டிங் புள்ளிகளைப் பெற்றுள்ள அவர், இந்த ஆண்டில் டி20 வீரர்களின் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தும் அசத்தியுள்ளார்.