2022 ICC Test Squad | 2022 ICC ODI Team | 2022 ஐசிசிடெஸ்ட்அணி | 2022 ஐசிசி ஒருநாள்அணி: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் அனைத்து வீரர்களின் செயல்பாட்டை வைத்து சிறந்த வீரர்களை கொண்ட ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை ஐசிசி அறிவித்து வருகிறது. அவ்வகையில், ஐசிசி நேற்று முன்தினம் 2022ம் ஆண்டுக்கான ஆடவர் டி20 அணி மற்றும் பெண்கள் டி20 அணியை அறிவித்திருந்தது.
Advertisment
ஐசிசி டெஸ்ட் அணியில் பண்ட்
இந்நிலையில், நேற்று 2022ம் ஆண்டுக்கான ஒருநாள் ஆடவர் அணி மற்றும் ஐசிசியின் 2022ம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் ஆடவர் அணியை அறிவித்துள்ளது. டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற தூணாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த அணியில் ஒரே ஒரு இந்திய வீரராக சமீபத்தில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த ரிஷப் பண்ட் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisment
Advertisement
25 வயதான ரிஷப் பண்ட் 12 இன்னிங்ஸ்களில் 61.81 சராசரி மற்றும் 90.90 ஸ்ட்ரைக் ரேட்டில் 680 ரன்கள் குவித்தார். மேலும், அந்த ஆண்டில் அவர் இரண்டு சதங்களும் நான்கு அரைசதங்களும் அடித்திருந்தார். அவர் 2022ல் டெஸ்டில் 21 சிக்ஸர்களை அடித்தார் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் ஆறு ஸ்டம்பிங் மற்றும் 23 கேட்சுகளை எடுத்தார்.
Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer
இந்த அணியில் தொடக்க வீரர்களாக ஆஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜாவும், வெஸ்ட் இண்டீசின் க்ரெய்க் ப்ராத்வெய்ட்டும் உள்ளனர். தொடர்ந்து 3 முதல் 7 வரிசை இடங்களுக்கு மார்னஸ் லபுஸ்சாக்னே (ஆஸ்திரேலியா), பாபர் ஆசம் (பாகிஸ்தான்), ஜானி பேர்ஸ்டோ (இங்கிலாந்து),பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து, ரிஷப் பண்ட் (இந்தியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பந்துவீச்சாளர்களாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்சும், தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடாவும், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனும், ஆஸ்திரேலியாவின் நாதன் லயனும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு ஒருநாள் அணியில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே
இந்திய மிடில் ஆர்டர் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகிய இருவர் மட்டுமே பாகிஸ்தானின் பாபர் அசாம் தலைமையிலான ஐசிசி ஒருநாள் அணியில் இடம் பெற்ற இரு இந்திய வீரர்கள் ஆவர்.
ஸ்ரேயாஸ் ஐயர்
2022 ஆம் ஆண்டில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் நிறைந்த பேட்டிங் வரிசையில் நங்கூரமாக இருந்தார். பெரும்பாலும் 4-வது வீரராக களமாடிய அவர் 17 ஆட்டங்களில் விளையாடி 55.69 சராசரியில் 724 ரன்கள் எடுத்தார். அவர் தனது ரன்களை 91.52 என்ற விறுவிறுப்பான வேகத்தில் எடுத்தார். அதில் ஒரு சதம் மற்றும் ஆறு அரைசதங்கள் அடங்கும். அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவின் ஒருநாள் அணியில் தனக்கான இடத்தையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் மிகவும் மேம்பட்ட பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இல்லாத நிலையில், சிராஜ் 15 ஒருநாள் போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்காக முன்னணி விக்கெட்டுகளை வீழ்த்தியவராக உள்ளார். அவர் 4.62 என்ற எக்கனாமியிலும், 23.50 என்ற சராசரியிலும், 3/29 என்ற சிறந்த பந்துவீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
முகமது சிராஜ்,
2022 ஐசிசி டெஸ்ட் அணி:
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, கிரேக் பிராத்வைட், மார்னஸ் லாபுஷாக்னே, பாபர் அசாம், ஜானி பேர்ஸ்டோவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, நாதன் லியோன் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன்.
2022 ஐசிசி ஒருநாள் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஷாய் ஹோப், ஷ்ரேயாஸ் ஐயர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), சிக்கந்தர் ராசா, மெஹிதி ஹசன் மிராஸ், அல்ஜாரி ஜோசப், முகமது சிராஜ், டிரென்ட் போல்ட் மற்றும் ஆடம் ஜம்பா.