Advertisment

ஒருநாள் தரவரிசையில் ரோகித்தை முந்தியவர்; கோலியை விட ஒரு புள்ளி கம்மி: யார் இந்த ஹாரி டெக்டர்?

ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஆட்டங்களில் 141 ரன்கள் குவித்த மூலம் 767 புள்ளிகளை அள்ளிய ஹாரி டெக்டர், ஒருநாள் தரவரிசையில் ரோகித்தை முந்தியும், கோலியை விட ஒரு புள்ளி பின்தங்கியும் உள்ளார்.

author-image
WebDesk
New Update
ICC ODI rankings one point behind Virat Kohli above Rohit Sharma Who is Harry Tector Tamil News

ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் முறையாக 4வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார் அயர்லாந்தின் ஹாரி டெக்டர்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ICC Rankings | Virat Kohli | Rohit Sharma | Harry Tectorசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி, ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதல் இடத்திலும், இந்திய அணியின் டாப் ஆடர் வீரர்களான சுப்மன் கில் மற்றும் விராட் கோலி 2 மற்றும் 3வது இடத்திலும், கேப்டன் ரோகித் 5வது இடத்திலும் உள்ளனர்.

Advertisment

இந்த பட்டியலில் அயர்லாந்தின் ஹாரி டெக்டர், ஒருநாள் போட்டி பேட்டிங் தரவரிசையில் முதல் முறையாக 4வது இடத்திற்கு முன்னேறினார். ஷார்ஜாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 ஆட்டங்களில் 141 ரன்கள் குவித்த மூலம் 767 புள்ளிகளை அள்ளிய ஹாரி டெக்டர், இந்திய அணியின் நட்சத்திர பேஸ்மேன்களான கோலியை (768) விட ஒரு புள்ளி குறைவாகவும், கேப்டன் ரோகித் சர்மாவை  21 ரேட்டிங் புள்ளிகள் அதிகம் பெற்று அவரை விட முன்னிலையிலும் உள்ளார். 

யார் இந்த ஹாரி டெக்டர்?

கடந்த 2019 ஆம் ஆண்டில் அயர்லாந்து தேசிய அணிக்காக அறிமுகமான ஹாரி டெக்டர் இதுவரை 5 டெஸ்ட் போட்டியில் ஆடி 370 ரன்களையும், 67 டி20 போட்டிகளில் ஆடி 1171 ரன்களையும் எடுத்துள்ளார். அதே நேரத்தில், டெக்டர் 45 ஒருநாள் போட்டிகளில் 49.91 சராசரியுடன் 1747 ரன்கள் எடுத்துள்ளார். 

2022, 2023, 2024 தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அவர் முறையே 384 (சராசரி - 76.80), 711 (சராசரி - 50.9), மற்றும் 141 (சராசரி - 70.50) என ரன்களை குவித்துள்ளார். கத்துக்குட்டி நாடுகளில் இருந்து வந்தாலும் அவர் கவனம் ஈர்க்கும் வீரராக இருக்கிறார். பந்தை டைமிங் செய்யும் திறமையும், நேர்த்தியான ஷாட்களை ஆடக் கூடியவராகவும் இருக்கிறார். மேலும்,  குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் அவர் அடைந்துள்ளார். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Who is Harry Tector, Ireland cricketer who is above Rohit Sharma in ODI rankings and just one point behind Virat Kohli

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Virat Kohli Rohit Sharma Icc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment