Advertisment

இறுதிப் போட்டிக்கு இந்தியாவுக்கு சாதகமான ஆடுகளம்: ஐ.சி.சி பிட்ச் ஆலோசகர் கேள்வி

வருகிற நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் ‘சாதகம் இல்லாமல்’ தயாராகுமா என்று ஐ.சி.சி ஆடுகளம் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
 ICC pitch consultant raises concerns switching of pitch  in favour India World Cup final Tamil News

ஐ.சி.சி போட்டிகளுக்கு ஆடுகளங்கள் ஆண்டி அட்கின்சனின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.

worldcup 2023 | ahmedabad | indian-cricket-team | icc: இந்திய மண்ணில் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Advertisment

இந்நிலையில், இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய முதல் அரையிறுதியில் நியூசிலாந்து -  இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில், வருகிற நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் (பிட்ச்) ‘சாதகம் இல்லாமல்’ தயாராகுமா என்று ஐ.சி.சி-யின் ஆடுகளம் ஆலோசகர் ஆண்டி அட்கின்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆங்கிலத்தில் படிக்கவும்: ICC pitch consultant raises concerns about switching of pitch that might favour India if they reach ICC World Cup final

ஆண்டி  அட்கின்சன் கடந்த வெள்ளியன்று அகமதாபாத்திற்கு சென்று இறுதிப் போட்டிக்கான ஆடுகளம் தயாரிப்புகளை சரிபார்த்ததாகக் கூறப்பட்டது. பின்னர், இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளத்தை மாற்றியதால் அவர் திருப்தியடையவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி மோதலுக்கு வான்கடே மைதானத்தில் உள்ள பெரும்பாலான புற்களை நீக்குமாறு இந்திய அணி நிர்வாகம் பி.சி.சி.ஐ க்யூரேட்டர்களிடம் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நேற்று (செவ்வாய்க்கிழமை) செய்தி வெளியிட்டது. இந்தியாவின் உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் மெதுவான ஆடுகளத்தை அணி நிர்வாகம் விரும்புதாகவும் குறிப்பிடப்பட்டது. 

கடந்த சில ஆண்டுகளாக சொந்த மண்ணில் இந்தியா மெதுவான ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உலகக் கோப்பைக்கு முன், அணி நிர்வாகம் தங்கள் போட்டிகளை மெதுவான ஆடுகளங்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.

ஐ.சி.சி போட்டிகளுக்கு ஆடுகளங்கள் ஆண்டி அட்கின்சனின் மேற்பார்வையின் கீழ் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஆடுகளம் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதை உள்ளூர் கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து முன்கூட்டியே முடிவு எடுத்து வருகிறார். 

இருப்பினும், டெய்லி மெயில் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், அகமதாபாத் ஸ்டேடியத்தில் விளையாடப்பட்ட 4 லீக் ஆட்டங்களில் 3 ஆட்டங்களுக்கு வெவ்வேறு ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், இந்தியா ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியை எட்டினால் இதே நிலை ஏற்படலாம் என்று ஆண்டி அட்கின்சன் அஞ்சம் தெரிவித்துளளார். 

அவரது பரிந்துரையானது பிட்ச் எண் 5ல் மட்டுமே விளையாடப்பட வேண்டும். இது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இருப்பினும் பிட்ச் எண் 6, இரண்டு முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களை விளையாட அனுமதிக்கும் என்று கடந்த வாரம் அறிந்து கொண்டார். 

தனது மின்னஞ்சலில் எச்சரித்துள்ள ஆண்டி அட்கின்சன் “இந்த நடவடிக்கைகளின் விளைவாக, அணி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க குறிப்பாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப தயார் செய்யப்பட்ட ஆடுகளத்தைக் கொண்ட முதல் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி இதுவாக இருக்குமா என்பதை ஒருவர் ஊகிக்க வேண்டும். மற்றும்/அல்லது உள்நாட்டு தேசிய வாரியத்தின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும். 

வழமையான முறையில் போட்டியில் போட்டியிடும் இரு தரப்புக்கும் விருப்பமின்றி தேர்வு செய்யப்படுமா அல்லது தயார் செய்யப்படுமா, மற்றும் சந்தேகத்திற்கு இடமின்றி அது சந்தர்ப்பத்திற்கான வழக்கமான ஆடுகளமாக இருக்கிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ahmedabad Worldcup Icc Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment