ICC Rankings Tamil News: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி, ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (886 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டசன் 2-வது இடத்திலும் (777 புள்ளி), பாகிஸ்தானின் பஹர் ஜமான் 3-வது இடத்திலும் (755 புள்ளி), இமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் (745 புள்ளி) உள்ளனர்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 85 ரன்கள் சேர்த்த இந்தியாவின் சுப்மன் கில் இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த இஷான் கிஷன் 9 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தையும், ஹர்திக் பாண்ட்யா 10 இடங்கள் முன்னேறி 71-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தரப்பில் டாப்-10 இடத்திற்குள் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார். அவர் 14-ல் இருந்து 10-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார். ஒரு நாள் ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஐந்து இடங்கள் முன்னேறி ஒட்டுமொத்தமாக 11 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
டி-20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். அவரைத் தவிர டாப்-10 இடத்திற்குள் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அறிமுகமாகி நேர்த்தியாக விளையாடி வரும் இந்தியாவின் திலக் வர்மா 46-வது இடத்தில் இருந்து தனது தரவரிசை கணக்கை தொடங்குகிறார். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் டாப்-10 இடத்திற்குள் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.