Advertisment

'நம்பர் ஒன்' இடத்தில் சூரியகுமார்; 5-வது இடத்துக்கு முன்னேறிய கில்: ஒரு நாள், டி-20 வீரர்கள் தரவரிசை

டி-20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்தில் இருந்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
ICC Ranking: Shubman Gill, Ishan Kishan climb 5th and 36th in ODI Tamil News

ஒருநாள் தரவரிசையில் இந்தியாவின் சுப்மன் கில் இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார்.

ICC Rankings Tamil News: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. ஒரு நாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி, ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் (886 புள்ளி) முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டசன் 2-வது இடத்திலும் (777 புள்ளி), பாகிஸ்தானின் பஹர் ஜமான் 3-வது இடத்திலும் (755 புள்ளி), இமாம் உல்-ஹக் 4-வது இடத்திலும் (745 புள்ளி) உள்ளனர்.

Advertisment

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 85 ரன்கள் சேர்த்த இந்தியாவின் சுப்மன் கில் இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடத்தை (743 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 3 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்த இஷான் கிஷன் 9 இடங்கள் முன்னேறி 36-வது இடத்தையும், ஹர்திக் பாண்ட்யா 10 இடங்கள் முன்னேறி 71-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஹேசில்வுட் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தரப்பில் டாப்-10 இடத்திற்குள் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மட்டுமே உள்ளார். அவர் 14-ல் இருந்து 10-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளார். ஒரு நாள் ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹர்திக் பாண்டியா ஐந்து இடங்கள் முன்னேறி ஒட்டுமொத்தமாக 11 வது இடத்தைப் பிடித்துள்ளார்.

டி-20 கிரிக்கெட் தரவரிசையில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் 907 புள்ளிகளுடன் 'நம்பர் ஒன்' இடத்தில் கம்பீரமாக பயணிக்கிறார். அவரைத் தவிர டாப்-10 இடத்திற்குள் ஒரு இந்திய வீரர் கூட இல்லை. பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (811 புள்ளி) 2-வது இடத்தில் இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் அறிமுகமாகி நேர்த்தியாக விளையாடி வரும் இந்தியாவின் திலக் வர்மா 46-வது இடத்தில் இருந்து தனது தரவரிசை கணக்கை தொடங்குகிறார். பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித்கான் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் டாப்-10 இடத்திற்குள் இல்லை.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Shubman Gill Icc Suryakumar Yadav Ishan Kishan Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment