எம்.ஜி.ஆர் 'டூ' சிவகார்த்திகேயன்; யாரையும் விட்டுவைக்கல - அஷ்வின் கேள்விக்கு ரசிகர்கள் பங்கம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
icc ravichandran ashwin bcci covid 19

icc ravichandran ashwin bcci covid 19

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவில், "கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்?" என்று ஒரு கேள்வியை முன்வைத்திருந்தது. இதற்கு ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களின் பெயரைக் குறிப்பிட்டனர்.

Advertisment
10, 2020

Advertisment
Advertisements

ஐசிசியின் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ள அஷ்வின் ரவிச்சந்திரன், " 'கோவில்' படத்தில் வரும் புல்லட் பாண்டியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டுள்ளார். அதோடு, ''திரைப்படங்களில் வரும் மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் யார் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்'' என்று கேள்வி கேட்டிருந்தார்.

அஸ்வினின் இந்தப் பதிவில் ரசிகர்கள் பலரும், சுவாரஸ்யமாக பதில் அளித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் கூடைப்பந்து ஆடுவது, மனிதன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சண்டையில் ரஜினிகாந்த், வெடிகுண்டுகளை கேட்ச் பிடித்து ரிட்டர்ன் விடுவது, சின்ன கவுண்டர் படத்தின் விஜயகாந்த் பம்பரம் விட்டது, மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் டம்மி பாக்ஸராக நடித்தது என்று தங்களுக்கு தெரிந்த ஹீரோக்களின் அனைத்து சாகசங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

10, 2020

10, 2020

10, 2020

10, 2020

சிலரோ, 'வெண்ணிலா கபடிகுழு’ விஷ்ணு விஷால், ‘கில்லி’ விஜய், ‘பிகில்’ விஜய் என்று சீரியஸாக பதில் அளித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Ravichandran Ashwin Icc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: