எம்.ஜி.ஆர் ‘டூ’ சிவகார்த்திகேயன்; யாரையும் விட்டுவைக்கல – அஷ்வின் கேள்விக்கு ரசிகர்கள் பங்கம்

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவில், “கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்?” என்று ஒரு கேள்வியை முன்வைத்திருந்தது. இதற்கு ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களின் பெயரைக் குறிப்பிட்டனர். Who is the one player from another sport you think would’ve made a good cricketer? — ICC (@ICC) […]

icc ravichandran ashwin bcci covid 19
icc ravichandran ashwin bcci covid 19

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவில், “கிரிக்கெட் அல்லாத வேறொரு விளையாட்டைச் சார்ந்த ஒருவர் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்?” என்று ஒரு கேள்வியை முன்வைத்திருந்தது. இதற்கு ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களின் பெயரைக் குறிப்பிட்டனர்.


ஐசிசியின் இந்தப் பதிவைப் பகிர்ந்துள்ள அஷ்வின் ரவிச்சந்திரன், ” ‘கோவில்’ படத்தில் வரும் புல்லட் பாண்டியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். அதோடு, ”திரைப்படங்களில் வரும் மற்ற விளையாட்டைச் சேர்ந்த வீரர்கள் யார் சிறந்த கிரிக்கெட் வீரராக ஆகியிருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்” என்று கேள்வி கேட்டிருந்தார்.


அஸ்வினின் இந்தப் பதிவில் ரசிகர்கள் பலரும், சுவாரஸ்யமாக பதில் அளித்து வருகின்றனர். எம்.ஜி.ஆர் கூடைப்பந்து ஆடுவது, மனிதன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி சண்டையில் ரஜினிகாந்த், வெடிகுண்டுகளை கேட்ச் பிடித்து ரிட்டர்ன் விடுவது, சின்ன கவுண்டர் படத்தின் விஜயகாந்த் பம்பரம் விட்டது, மான் கராத்தே படத்தில் சிவகார்த்திகேயன் டம்மி பாக்ஸராக நடித்தது என்று தங்களுக்கு தெரிந்த ஹீரோக்களின் அனைத்து சாகசங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சிலரோ, ‘வெண்ணிலா கபடிகுழு’ விஷ்ணு விஷால், ‘கில்லி’ விஜய், ‘பிகில்’ விஜய் என்று சீரியஸாக பதில் அளித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Icc ravichandran ashwin bcci covid 19

Next Story
‘நாட்டை விட விளையாட்டு முக்கியமல்ல’ – அக்தருக்கு கபில் தேவ் ‘ஸ்வீட்’ ரிப்ளை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com