ICC Announces Fixtures for Mens and Womens T20: ஆஸ்திரேலியாவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஆண்கள், மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது.
ஆண்கள் டி20 உலகக்கோப்பை போட்டிகள் வரும் 2020-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அக்டோபர் 24-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை லீக் சுற்றுப்போட்டிகள் நடக்கின்றன. அதற்கு முன்னதாக அக்டோபர் 18-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
நவம்பர் 11 மற்றும் 12-ம் தேதிகளில் அரையிறுதிப் போட்டிகளும், 15-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை 45 போட்டிகள் நடக்கின்றன, 16 அணிகள் பங்கேற்கின்றன. 7 நகரங்களில், 7 இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது.
டி20 தரவரிசையில் முதல் 8 இடத்தில் உள்ள அணிகள் நேரடியாக லீக் சுற்றுக்கு தகுதிப் பெற்றன. இலங்கை 9வது இடமும், வங்கதேசம் 10வது இடத்திலும் உள்ளதால் அவ்விரு அணிகளும் இதர சிறிய அணிகளுடன் தகுதிச் சுற்றில் மோதி, தங்கள் பிரிவில் டாப் 2 இடங்களில் இடம் பிடித்தால் மட்டுமே லீக் சுற்றுக்கு முன்னேற முடியும்.
'பி' பிரிவில் இந்திய அணி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதில் இந்திய அணியோடு, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் 2 அணிகள் இடம் பெறுகின்றன. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது இந்திய அணி.
குரூப்-1ல் நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தகுதிச்சுற்றில் இடம் பெறும் இரு அணிகள் ஆகியவை இடம் பெறுகின்றன.
Super 12s ஆட்டங்கள் 2020 அக்டோபர் 24-ம் தேதி தொடங்குகின்றன. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஆஸ்திரேலிய அணியுடன் பாகிஸ்தான் அணி மோதுகிறது. நடப்பு சாம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் அணி அக்டோபர் 25-ம் தேதி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணி மோதும் லீக்(Super 12s) போட்டிகள்
1. 2020 அக்டோபர் 24 - இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - பெர்த்
2. 2020 அக்டோபர் 29 - இந்தியா vs ஏ பிரிவில் 2-ம் அணி - மெல்போர்ன்
3. 2020 நவம்பர் 1 - இந்தியா vs இங்கிலாந்து - மெல்போர்ன்
4. 2020 நவம்பர் 5 - இந்தியா vs பி பிரிவில் முதல் அணி - அடிலெய்ட்
5. 2020 நவம்பர் 8 - இந்தியா vs ஆப்கானிஸ்தான் - சிட்னி
பெண்கள் டி20 உலகக் கோப்பை
பெண்கள் டி20 உலகக் கோப்பை பிப்ரவரி 21ம் தேதி தொடங்குகிறது
முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது.
பிப் 21 - இந்தியா vs ஆஸ்திரேலியா - சிட்னி
பிப் 24 - இந்தியா vs குவாலிஃபயர் 1
பிப் 27 - இந்தியா vs நியூசிலாந்து
பிப் 29 - இந்தியா vs இலங்கை