Advertisment

டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் இந்தியா எந்த அணிகளுடன் மோதல்? போட்டிகள் எப்போது?

டி20 உலகக்கோப்பை 2024: 19 ஆம் தேதி தொடங்குகிறது சூப்பர் 8 சுற்று; இந்தியா மோதும் அணிகள் எவை? போட்டிகள் எப்போது, எங்கு நடைபெறுகிறது? முழு விபரம் இங்கே

author-image
WebDesk
New Update
Indias semi final chances in T20 World Cup 2024  Tamil News

டி20 உலகக்கோப்பை 2024: 19 ஆம் தேதி தொடங்குகிறது சூப்பர் 8 சுற்று; இந்தியா மோதும் அணிகள் எவை?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

டி20 உலகக்கோப்பை தொடர் சூப்பர் 8 சுற்றை நெருங்கி உள்ள நிலையில், இந்திய அணி மோத உள்ள ஆட்டங்கள் குறித்து இப்போது பார்ப்போம். 

Advertisment

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 1 ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. மொத்தம் 20 அணிகள் 4 குழுக்களாக லீக் சுற்றில் விளையாடின. லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

இந்திய அணி அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. லீக் சுற்றில் இந்தியா – கனடா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்தநிலையில், சூப்பர் 8 சுற்று வரும் 19 ஆம் தேதி தொடங்குகிறது. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். முடிவில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் குறித்து இப்போது பார்ப்போம்.

1). இந்தியா – ஆப்கானிஸ்தான் : ஜூன் 20 - பார்படாஸ் மைதானம்

2). இந்தியா - வங்காளதேசம் : ஜூன் 22 - ஆண்டிகுவா மைதானம்

3). இந்தியா - ஆஸ்திரேலியா : ஜூன் 24 – செயிண்ட் லூசியா மைதானம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

cricket news T20 World Cup 2024 Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment