டி20 உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் தசைப்பிடிப்பு என போலியாக நடித்ததாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்தது. அடுத்து மழை காரணமாக வங்கதேச அணிக்கு 19 ஓவர்களில் 114 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் வங்கதேச அணி 105 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றது.
முன்னதாக ஆட்டத்தின் நடுவே, ஆப்கானிஸ்தான் வீரர் குல்பாடின் நைப் தசைப்பிடிப்பு என்று கூறி தரையில் விழுந்தார், ஆனால் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் அவரின் 'தசைப்பிடிப்புகளைப் போலி' என்று விமர்சித்தார்கள். ஆட்டம் நிறுத்தப்பட்டு, குல்பாடின் நைப்பை அணியின் பிசியோதெரபிஸ்ட் மற்றும் ஒரு சக வீரர் களத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜொனாதன் ட்ராட் கூட, மழை மீண்டும் பெய்யத் தொடங்கியதால் சக வீரர்களை மெதுவாக விளையாடச் சொன்னதைக் காண முடிந்தது. இந்தப் போட்டியின் போது மூன்றாவது முறையாக மழை பெய்ததால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“