ஐசிசி டி20 தரவரிசை இன்று (நவ.11) வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
இதில், வங்கதேசத்திற்கு எதிரான இறுதி டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திய தீபக் சாஹர், 88 இடங்கள் முன்னேறி 42வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆனால், இந்த டி20 ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் முதன்மை இடங்களை ஸ்பின்னர்களே ஆக்ரமித்துள்ளனர். முதலிடத்தில் ஆப்கான் கேப்டன் ரஷீத் கான் நீடிக்க 2ம் இடத்தில் மிட்செல் சாண்ட்னர் உள்ளார். டாப் 9 பவுலர்களில் 8 பேர் ஸ்பின்னர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், ஒரு இந்தியர் கூட டாப் 10 இடங்களில் இல்லை.
பேட்டிங் தரவரிசையில் 7ம் இடத்தில் ரோஹித் ஷர்மாவும், 8வது இடத்தில் லோகேஷ் ராகுலும் உள்ளனர்.
பாகிஸ்தானின் பாபர் ஆஸம் முதலிடம் வகிக்கும் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் டேவிட் மலான் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா டி20 கேப்டன் ஆரோன் ஃபின்ச் 4ம் இடத்திலிருந்து 2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், நியூஸிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்தில் இணைந்து 9ம் இடத்துக்கு முன்னேறியுள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடம் பிடித்துள்ளார்.
கிளென் மேக்ஸ்வெல் 2வது இடத்தில் உள்ளார். இதில், 9 வது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஜே.பி.டுமினி உள்ளார். அவர், கடந்த ஜூலை மாதமே அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.