அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது.
இந்நிலையில், 12 வீரர்கள் அடங்கிய 2024 டி-20 உலகக் கோப்பைக்கான அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த ஐ.சி.சி அணியில், ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்திய அணியில் இருந்து 6 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ரோகித் சர்மாவுடன் இணைந்து, ஆப்கானிஸ்தான் நட்சத்திரம் ரஹ்மானுல்லா குர்பாஸ் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கேப்டன் ரோகித் தொடர் முழுதும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 36.71 சராசரி மற்றும் 156.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 257 ரன்கள் எடுத்தார். மேலும், அவர் மூன்று அரை சதங்களையும் குவித்தார். மறுபுறம், குர்பாஸ் 35.12 மற்றும் 124.33 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் மூன்று அரைசதங்களுடன் 281 ரன்களை எடுத்தார்.
ஐ.சி.சி வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை நம்பர். 3-வது இடத்திலும், இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். தன்னை விமர்சிப்பவர்களை வாயடைத்த ஹர்திக் பாண்டியா 6வது இடத்திலும், அக்சர் படேல் 7வது இடத்திலும் உள்ளனர். டெய்லெண்டர்களில் ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் அன்ரிச் நார்ட்ஜே ஆகியோர் 12-வது வீரராக உள்ளனர்.
2024 டி-20 உலகக் கோப்பைக்கான போட்டியின் ஐ.சி.சி அணி இதோ:
தொடக்க ஆட்டக்காரர்கள்: ரோகித் சர்மா, ரஹ்மானுல்லா குர்பாஸ்
டாப் ஆர்டர்: நிக்கோலஸ் பூரன், சூர்யகுமார் யாதவ்
ஆல்ரவுண்டர்கள்: மார்கஸ் ஸ்டோனிஸ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல்
பந்துவீச்சாளர்கள்: ரஷித் கான், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஃபசல்ஹாக் ஃபரூக்கி
12வது வீரர்: அன்ரிச் நார்ட்ஜே.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“