ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இந்திய எதிர்காலங்கள் ப்ரித்வி ஷா, ரிஷப் பண்ட் அபாரம்

ICC Test Rankings : ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டது. இதில், டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 935 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். சட்டீஸ்வர் புஜாரா 765 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார். அஜின்க்யா ரஹானே 18வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 23வது இடத்திலும் உள்ளனர்.

இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமும், 2-வது டெஸ்ட் போட்டியில் 70, 33 ரன்கள் சேர்த்த இளம் வீரர் ப்ரித்வி ஷா 13 இடங்கள் முன்னேறி 60 இடத்துக்கு உயர்ந்துள்ளார்.

மற்றொரு வீரர் ரிஷப் பண்ட் 92 ரன்கள் சேர்த்ததன் மூலம் 23 இடங்கள் உயர்ந்து, 62-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பந்துவீச்சாளர்களில், ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், 4 புள்ளிகள் பெற்று 25-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். உள்நாட்டில் நடக்கும் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையில், ரவீந்திர ஜடேஜா 400 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 341 புள்ளிகளுடன் அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர். ஷகிப் அல் ஹசன் 420 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில், 116 ரேட்டிங்குடன் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close