Advertisment

டெஸ்ட் தரவரிசை: இன்னமும் அஷ்வின்தான் டாப்; ரகானே, ஷர்துல் முன்னேற்றம்

இந்திய அணியின் ரஹானே 135 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் தரவரிசை பட்டியலில் 37 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்

author-image
WebDesk
New Update
ICC Test rankings: R Ashwin in top spot, Rahane, Shardul rise Tamil News

India's Ravichandran Ashwin. (AP Photo)

ICC Test rankings - Team India Tamil News: ஐசிசி நடத்திய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மோதின. இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Advertisment

இந்நிலையில், இந்த தொடருக்குப் பிறகான ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, பேட்டிங் தரவரிசையில் முதல் மூன்று இடங்களை ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் பிடித்துள்ளனர். இந்த மூன்று வீரர்களும் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் மார்னஸ் லாபுசாக்னே 67 ரன்களும், ஸ்மித் 155 ரன்களும், ஹெட் 181 ரன்களும் எடுத்து இருந்தனர்.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போதிலும், இந்திய அணியின் ரஹானே 135 ரன்கள் எடுத்ததன் மூலம் அவர் தரவரிசை பட்டியலில் 37 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் முதல் இன்னிங்ஸில் அரை சதம் அடித்த ஷர்துல் தாக்கூர் 6 இடங்கள் முன்னேறி 94வது இடத்தில் உள்ளார்.

கார் விபத்தைத் தொடர்ந்து குணமடைந்து வரும் இந்திய விக்கெட் கீப்பர் வீரரான ரிஷப் பந்த், இந்திய தரவரிசையில் 10-வது இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறார். ஆனால், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 12 மற்றும் 13-வது இடங்களில் உள்ளனர். புஜாரா 25வது இடத்திலும், சுப்மன் கில் 50வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் மூத்த சுழற்பந்துவீச்சாளரான அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்காவிட்டாலும், அவர் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். மற்றொரு சுழற்பந்து வீச்சாளரான ரவீந்திர ஜடேஜா தனது 9வது இடத்தைப் பிடித்துள்ளார்.

ஜூலை 2022ல் கடைசியாக ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடிய காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா, 2 இடங்கள் சரிந்து 8வது இடத்திற்கு வந்துள்ளார். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அஸ்வின் 2வது இடத்தில் உள்ளார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team World Test Championship Indian Cricket Ravindra Jadeja Ravichandran Ashwin Ajinkya Rahane Shardul Thakur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment