IND vs BAN 2nd ODI - ICC trolled mercilessly Tamil News: வங்கதேச மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் – 05) நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதிய 2வது ஒருநாள் ஆட்டம் நேற்று (புதன்கிழமை) டாக்கா மைதானத்தில் பகல் 11:30 மணிக்கு தொடங்கி நடந்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் மஹ்முதுல்லா (77) – மெஹிதி ஹசன் மிராஸ் (100) நிதானம் கலந்த அதிரடி ஆட்டத்தால் 271 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வங்கதேசத்திடம் தோல்வியடைந்தது. இந்த த்ரில் வெற்றியின் மூலம் வங்கதேசம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. மேலும், தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியாவுடன் மோதிய டீம் வங்கதேசமா, கனடாவா? கன்ஃபியூஸ் ஆன ஐ.சி.சி
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஒரு பெரிய தவறுதலான பதிவை ட்வீட் செய்ததற்கு ரசிகர்கள் கொடூரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
முன்னதாக, இந்த ஆட்டத்திற்காக டாஸ் போட்ட போது வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ் டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட ஐ.சி.சி ஒரு துரதிர்ஷ்டவசமான குழப்பத்தை ஏற்படுத்தியது. வங்கதேசம் மற்றும் இந்தியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி குறித்த டாஸ் அப்டேட்டைப் பகிரும் போது கனடா கிரிக்கெட் அணியின் புகைப்படத்தை ஐசிசி வெளியிட்டது. இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் இரக்கமின்றி ட்ரோல் கொடூரமாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil