இந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வரவேற்கும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி குஜராத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான மோடேராவில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், சச்சின், விராட் கோலி போன்ற தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களை, இந்திய மக்கள் உற்சாகப்படுத்தியதாக தெரிவித்தார். அப்போது, சச்சின் டெண்டுல்கரை சூச்சின் (Soo-chin) டெண்டுல்கர் என்றும், விராட் கோலியின் பெயரை “Virot Kolee” என்றும் உச்சரித்தார். அவரது இந்த உச்சரிப்பு பார்வையாளர்களை நகைப்புக்குள்ளாக்கியது.
சச்சின் பெயரை மட்டுமல்ல, அமிதாப் பச்சன் நடித்த 'ஷோலே' படத்தை 'ஷோஜே' என்றும் 'Vedas' என்பதை 'Vestas' என்றும், சுவாமி விவேகானந்தா என்பதை 'சுவாமி விவேகாமணன்' என்று ஏகத்துக்கு உளறியிருக்கிறார்.
இந்தியாவில் டிரம்ப் 2ம் நாள் சுற்றுப்பயணம் - லைவ் அப்டேட்ஸ் இங்கே
இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட்டர் சச்சின் பெயரை டிரம்ப் தவறாக உச்சரித்ததை கிண்டல் செய்யும் விதமாக, ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சச்சின் பெயரை சூச்சின் என்று அவர்களது DataBase-ல் தேடுவது போன்று நக்கலடித்து வீடியோ வெளியிட்டுள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள், குறிப்பாக தமிழத்தின் சில முன்னணி தலைவர்கள் கூட உவமைகள் சொல்லும் போது, அதை தவறாக கூறுவது, அறிஞர்களின் பெயர்களை தவறாக கூறுவது, ஏன் நாட்டின் பிரதமர் பெயரையே மாற்றிக் கூறுவது என்று காமெடி செய்து கொண்டிருக்கும் சூழலில், உலகின் சக்தி வாய்ந்த தலைவரான அமெரிக்க அதிபரே இப்படி இருந்தால் என்ன செய்ய!!!?