'விராட் கோலி எங்களுக்காக உலகக் கோப்பையில் ஆட வேண்டும்!' - வங்கதேச கேப்டன் மோர்டசா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ICC World Cup 2019: Virat Kohli, other captains choose opposition players

ICC World Cup 2019: Virat Kohli, other captains choose opposition players

உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 தொடர், வரும் மே 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இங்கிலாந்து-னு சொன்னவுடன் 2013 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியன் டீம் ஜெயிச்சது மாதிரி, இப்போதும் இந்தியன் டீம் இங்கிலாந்துல உலகக் கோப்பையை ஜெயிச்சிடும்-னு கனவுலாம் காணக் கூடாது.

Advertisment

அது வேற.. இது வேற...

அன்று இந்தியாவின் பலம் வேறு, இன்று இந்தியாவின் பலம் வேறு.

அன்று ஓப்பனர்ஸ் ரோஹித், தவான் ஃபார்ம் வேறு, இன்று அவர்களின் ஃபார்ம் வேறு. (அதை கடல் கடந்து தேடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்தால் சொல்கிறோம்)

Advertisment
Advertisements

இப்படியாக சூழ்நிலை இருக்க, உலகக் கோப்பையில் கலந்து கொள்ளவிருக்கும் அணிகளின் கேப்டன்களிடம், மற்ற அணிகளில் இருந்து ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டுமெனில், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. (இவனுங்களே டீமுல உள்ள குறையை வெட்ட வெளிச்சமாக்கிடுவானுங்க போலயே!!!)

அதற்கு கேப்டன்கள் அளித்த சுவாரஸ்ய பதில் இதோ,

வங்கதேச கேப்டன் மோர்டசா - விராட் கோலி

தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ் - பும்ரா, ரஷித் கான், பேட் கம்மின்சன்

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் - ரஷித் கான்

ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ச் - காகிசோ ரபாடா

இலங்கை கேப்டன் கருணரத்னே - பென் ஸ்டோக்ஸ்

பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபரஸ் கேப்டன் - ஜோஸ் பட்லர்

விராட் கோலி - டு பிளசிஸ்

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டரும், இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனும் தங்கள் அணி சிறப்பாக இருப்பதால் மற்ற வீரர்கள் தேவையில்லை என்றனர்.

'அந்தந்த போட்டியை பொறுத்தே வீரரை தேர்வு செய்ய முடியும்' என ஆப்கானிஸ்தான் கேப்டன் நைப் பதில் அளித்தார். (அவிங்களே சும்மா ஏதோ கேட்குறாய்ங்க... இந்தாளு விட்டா மேட்ச்சுக்கு மேட்ச்சு பிளேயர் கேப்பாரு போலிருக்கே!)

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: