ICC World Cup 2019: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கிலாந்தும் இலங்கையும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்து அணிக்கு 233 ரன்கள் இலக்காக இருந்தது. களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ஒவ்வொருவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அந்த அணியில் நிதானமாக விளையாடிய ஸ்டோக்ஸ் 82 ரன்கள் எடுத்தார்.
சரியாக 47-வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இலங்கை அணியில் அதிகபட்சமாக, அவிஷ்கா ஃபெர்னாண்டோ 39 பந்துகளில் 49 ரன்களையும், குசால் மெண்டிஸ் 68 பந்துகளில் 46 ரன்களையும் எடுத்திருந்தனர்.
போட்டியின் முடிவில் பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயோன் மார்கன், "இலக்கை சேஸ் செய்ய தொடங்கியபோது அடிப்படையான ஒரு விஷயத்தை செய்ய நாங்கள் தவறிவிட்டோம். உடைக்க முடியாத பார்ட்னர்ஷிப்பை உருவாக்க நாங்கள் தவறவிட்டோம். அதுவே எங்களின் தோல்விக்கு காரணமாகிவிட்டது” என்றார்.
அடுத்த போட்டியில் இலங்கை அணி தென் ஆப்ரிக்காவையும், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.