India A vs Pakistan A Live Score, Emerging Asia Cup 2023 Final Tamil News: இலங்கை மண்ணில் விறுவிறுப்பாக நடந்து வரும் இளம் வீரர்களுக்கான (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை (Emerging Asia Cup 2023) கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.
கொழும்புவில் இந்தியா ஏ - பாகிஸ்தான் ஏ அணிகள் இடையே நடைபெற்ற இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.
டாஸ் வென்ற இந்தியா பவுலிங்; பாக்,. அணி பேட்டிங்
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற யாஷ் துல் தலைமையிலான இந்தியா ஏ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி, முகமது ஹரீஸ் தலைமையிலான பாகிஸ்தான் ஏ அணி பேட்டிங் செய்தது.
தொடக்கம் முதல் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சைம் அயூப், சாஹிப்சாதா பர்ஹான் இருவரும் அரைசதம் அடித்தனர்.பின்னர் சைம் அயூப் 59 ரன்களும் , சாஹிப்சாதா பர்ஹான் 65 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் உமைர் யூசுப் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் தயப் தாஹிர் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி , சிக்சருக்கு விரட்டிய அவர் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய தயப் தாஹிர் 108 ரன்களில் வெளியேறினார்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ரியான் பராக், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் யஷ் துல் இருவரும் களம் இறகினார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. சிறப்பாக விளையாடி இந்த ஜோடி பங்காளி ஆட்டத்துக்கு 50 ரன்களைக் கடந்த நிலையில், 8.5 ஓவரில் 64 ரன் குவித்தனர். சுதர்ஷன் 29 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
நிக்கின் ஜோஸ் 11 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரை அடுத்து வந்த அபிஷேக் யஷ் துல் உடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் 61 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர்.
இவரை அடுத்து நிஷாந்த் சிந்து யஷ் துல் உடன் ஜோடி சேர்ந்தார். சிந்து 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இவரை அடுத்து, துருவ் ஜுரெல் வந்து யஷ் துல் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்க வில்லை. அதுவரை சிறப்பாக விளையாடி வந்த யஷ் துல் அவுட் ஆனார். இதத் தொடர்ந்து விக்கெட்டுகள் மலமலவென சரியத் தொடங்கியது. இதனால், இந்திய ஏ அணி 40-வது ஓவரில் 224 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், பாகிஸ்தான் ஏ அணி 128 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எமர்ஜிங் ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடி 72 பந்துகளுக்கு 108 ரன்கள் குவித்த அந்த அணியின் தய்யப் தாஹீர் ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
பாகிஸ்தான் ஏ:
சைம் அயூப், சாஹிப்சாதா ஃபர்ஹான், உமைர் யூசுப், தயாப் தாஹிர், காசிம் அக்ரம், முகமது ஹாரிஸ் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), முபாசிர் கான், மெஹ்ரான் மும்தாஜ், முகமது வாசிம் ஜூனியர், அர்ஷத் இக்பால், சுபியான் முகீம்.
இந்தியா ஏ:
சாய் சுதர்சன், அபிஷேக் சர்மா, நிகின் ஜோஸ், யாஷ் துல்(கேட்ச்), ரியான் பராக், நிஷாந்த் சிந்து, துருவ் ஜூரல்(வ), மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, ஆர்எஸ் ஹங்கர்கேகர், யுவராஜ்சிங் தோடியா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.