Delhi Stadium pitch report for 2nd Test IND vs AUS Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. நாக்பூரில் கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 9 ஆம் தேதி) முதல் தொடங்கி நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இதையும் படியுங்கள்: IND vs AUS 2nd Test LIVE Score: 100-வது டெஸ்டில் புஜாரா… டாஸ் வென்ற ஆஸி,. முதலில் பேட்டிங்!
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நாளை வெள்ளிக் கிழமை (பிப்ரவரி 17) முதல் தொடங்குகிறது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் நேற்று முதல் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுனர்.
டெல்லி பிட்ச் ரிப்போர்ட்:
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அஷ்வின் 8 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பேட்டிங்கிலும் அசத்திய ஜடேஜா அரைசதம் விளாசினார். அதேநேரத்தில், ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் மந்தமான ஆட்டம் ஆடுகளத்தின் மீது சில சர்ச்சைகளையும் கொண்டுவந்தது.
இந்த நிலையில், 2வது போட்டி நடக்கும் டெல்லி ஆடுகளத்தில் இந்திய அணி வலுவான ரன்களை குவித்த சாதனையைக் கொண்டுள்ளது. மற்ற எல்லா இந்திய மைதானங்களையும் போலவே ஆட்டத்தின் ஆரம்ப நாட்களில் பேட்டிங்கிற்கு ஆடுகளம் அருமையாக இருக்கும். விளையாட்டு முன்னேறும்போது ஸ்பின்னர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் பயன்படுத்தப்படுவார்கள்.
இந்த டிராக்கில் ஒப்பீட்டளவில் குறைந்த அளவே பவுன்ஸ் இருக்கும். இது பேட்டர்களுக்கு கூடுதல் சவாலாக அமையும். இங்கு, முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 342 ரன்களாக உள்ளது. நான்காவது நாள் ஆட்ட இன்னிங்ஸில் சராசரி ஸ்கோர் 165 ரன்களாகும். இந்த மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர்களில் அனில் கும்ப்ளே முதலிடத்தில் உள்ளார். வேகப்பந்து பந்துவீச்சு வரிசையை கொண்ட ஆஸ்திரேலிய அணி இங்கு மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த போராடுவார்கள்.
இதையும் படியுங்கள்: IND vs AUS 2nd Test LIVE Score: 100-வது டெஸ்டில் புஜாரா… டாஸ் வென்ற ஆஸி,. முதலில் பேட்டிங்!
டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைப்பெற்ற 36 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 6 போட்டிகளிலும், முதலில் பந்துவீசிய அணி 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil