ind beat sa 3rd test won series 3-0 virat kohli - தென்னாப்பிரிக்கவை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் - இந்தியாவின் முதல் ஆல் டைமன்ஷன் வெற்றி!
'உலகின் எந்த இடத்திலும் நாங்கள் வெல்வோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா என்று எங்கும் வெல்வோம்' என்று உலகின் பவர்ஃபுல் அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவை ஒயிட் வாஷ் செய்த பிறகு கேப்டன் கோலி உதிர்த்த கான்ஃபிடன்ட் வார்த்தைகள் இவை.
Advertisment
ஆம்! இது வெறும் கான்ஃபிடன்ட் வார்த்தைகள் மட்டுமல்ல, பேட்டிங், அட்டாகிங் ஃபாஸ்ட் பவுலிங், பெஸ்ட் ஸ்பின் பவுலிங், கேட்ச்கள் விடாத ஃபீல்டிங், எதிரணியை கடைசி வரை வீறிட முடியாமல் செய்தல் என இத்தனை ஆண்டுகால இந்திய கிரிக்கெட் வராலற்றில், இந்திய அணி முதன்முறை பெற்ற ஆல் டைமன்ஷன் துவம்ச வெற்றி இது என்று கூறலாம்.
அதிர்ந்த ராஞ்சி
Advertisment
Advertisements
ராஞ்சியில் நடந்த தென்.ஆ., அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 497 ரன்கள் குவித்தது. ரோஹித் ஷர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும், இந்தியாவிற்கு கமாண்டிங் ஸ்கோரை விதைத்தது.
மாவீரன், பேரரசன் ராஜ ராஜ சோழனின் அடங்கா திமிறும் குதிரையின் பாய்ச்சலாய் ரோஹித்தின் ஆட்டம் இந்தியாவின் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியதுடன், இனி காற்று நம் பக்கம் வீசவே வீசாதா என்று தென்.ஆ., பவுலர்களை ஏங்க வைத்துவிட்டது.
ரன்களை அடிக்க விட்ட பிறகு, பேட்டிங்கில் ஏதாவது செய்யலாம் என்று களமிறங்கிய தென்னாப்பிரிக்காவின் தொடக்க விக்கெட்டுகளை உமேஷ் யாதவும், ஷமியும் கபளீகரம் செய்துவிட்டனர். குறிப்பாக இருவரின் Bumper (பவுன்ஸ்) பந்துகள் தென்.ஆ., வீரர்களை உண்மையில் பயம் கொள்ள வைத்துவிட்டது.
Ind vs sa 3rd Test : விக்கெட் களிப்பில் உமேஷ் யாதவ்
பந்து எங்கே பிட்ச் ஆகி, எங்கே வந்து தாக்கும் என்ற குறைந்தபட்ச ரீடிங்கில் கூட அந்த அணியின் சீனியர் பேட்ஸ்மேன்கள் கூட தடுமாற, இலக்கங்கள் இன்றி நிற்கதியாகிப் போனது ஸ்கோர் போர்டு.
முதல் இன்னிங்ஸில் 162க்கு ஆல் அவுட்டாக, ஃபாலோ ஆன் கொடுத்த எதிரணி கேப்டன் விராட் கோலிக்கு நியாயம் சேர்க்கும் விதமாக 133 ரன்களுக்கு கட்டுப்பட்டுக் கொண்டது.
முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் ஷாபஸ் நதீம் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முடிவு, இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 - 0 என ஒயிட் வாஷ் செய்து வென்றிருக்கிறது இந்தியா.
இதன் மூலம், தென்னாப்பிரிக்க அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெயரையும், 3 டெஸ்ட் தொடர்களில் எதிரணியை ஒயிட் வாஷ் செய்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.