ஜூனியர் ( 19 வயதிற்குட்பட்டோருக்கான) உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில், இந்தியா, பாகிஸ்தான் அணியை இன்று (பிப்ரவரி 4) எதிர்கொண்டது.
19 வயதிற்குட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் 2020 ஜனவரி 17ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ரவுண்ட் ராபின் மற்றும் நாக் அவுட் முறைகளில் அடுத்தடுத்த சுற்றுக்கள் நடைபெற்ற நிலையில், தொடர் தற்போது அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய ஜூனியர் அணி, காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில், இன்று நடந்த முதல் அரையிறுதிப்போட்டியில், இந்தியா – பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், 43.1வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து மெகா வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 105 ரன்களும், சக்ஸேனா 59 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
India U19 vs Pakistan U19 Score : இந்திய அணி, பாகிஸ்தானிடமிருந்து ஆசிய கோப்பையை பறித்த நிலையில், இந்த தொடரில் மீண்டும் பாகிஸ்தான் உடன் மீண்டும் மோதுகிறது. 2018 உலககோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Web Title:Ind u19 vs pak u19 ind u19 vs pak u19 live score ind u19 vs pak u19 live streaming
இந்திய அணி 35.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 176 ரன்கள் எடுத்து மெகா வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 105 ரன்களும், சக்ஸேனா 59 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷவி ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தியிருக்கிறார். ஜெய்ஸ்வால் 58 ரன்களுடனும், சக்ஸேனா 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்திய அணி, 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹைல் 102 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் சுஷாந்த் மிஸ்ரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்கும் நிலையில், பாக்., கேப்டன் ரோஹைல் நசிர் அரைசதம் அடித்து விளையாடி வருகிறார். 39 ஓவர்கள் முடிவில், பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
பாகிஸ்தான் அணி, 14 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் பாகிஸ்தான் வீரர்கள் திணறிவருகின்றனர். பாகிஸ்தான் ஜூனியர் அணி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 36 ரன்களை எடுத்துள்ளது.