/tamil-ie/media/media_files/uploads/2018/10/d507.jpg)
India vs West Indies ODI Cricket Match Scorecard: இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
IND v WI Cricket LIVE Streaming: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை (அக்.24) நடைபெறுகிறது.
The KING is here!
This ground and the city of Visakhapatnam has a special bond. Memories aplenty. Let's create plenty more tomorrow. #TeamIndia#INDvWIpic.twitter.com/WfTSMvQh7x
— BCCI (@BCCI) 23 October 2018
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், கடந்த ஞாயிறன்று நடைபெற்ற முதல் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதைத் தொடர்ந்து நாளை இவ்விரு அணிகளுக்கும் இடையே 2வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.
இப்போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அணியில் அந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் விளையாடிய அதே அணி தான் நாளைய ஆட்டத்திலும் களமிறங்குகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி(வி.கீ), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், மொஹம்மத் ஷமி, கலீல் அஹ்மது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இப்போட்டி நாளை (அக்.24) பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இப்போட்டி நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆன்லைனில் Hotstar-ல் இப்போட்டியை காணலாம்.
LIVE Streaming, When and Where to watch India vs West Indies ODI Cricket Match LIVE Streaming Online : தவிர, இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் இப்போட்டியின் லைவ் ஸ்கோர் கார்டை கண்டு களிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.