IND v WI LIVE Cricket Score: இந்தியா-விண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா, விராட் கோலி சதம் அடித்தனர்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி குவஹாத்தியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பதி ராயுடு, எம்.எஸ் தோனி(வி.கீ), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், மொஹம்மத் ஷமி, கலீல் அஹ்மது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டியின் மூலம் ரிஷப் பண்ட் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் அடியெடுத்து வைக்கிறார். ரிஷப் பண்ட்டின் வருகை அணிக்கு லாபமோ இல்லையோ, தோனிக்கு பெரிய பிளஸ் என்று கூறலாம்.
ஏனெனில், தல தோனி தனது ஃபார்மில் தொடர்ந்து தடுமாறி வருகிறார். 30 பந்துகளுக்கு 70 ரன்கள் எடுக்க வேண்டும் என்றால் கொஞ்சம் ஜெர்க் ஆகிறார். எனினும் அவரது விக்கெட் கீப்பிங் மற்றும் அனுபவம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் என்றே சொல்லலாம்.
ரிஷப் பண்ட்டின் வருகை, தோனியின் பேட்டிங் பிரஷரை நிச்சயம் குறைக்கும். தோனியின் முக்கால்வாசி ரோலை பண்ட் எடுத்துக் கொள்வார் என்பது உறுதி.
முதலில் பேட் செய்த விண்டீஸ் 322 ரன்கள் குவித்து மிரட்டியது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் கிரன் போவெல் 51 ரன்கள், ஷிம்ரன் ஹெல்மேர் 106 ரன்கள் குவித்தனர். இந்திய தரப்பில் ஷமி, உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ரன்களை வாரிக் கொடுத்தனர்.
பின்னர் பேட்டிங்கில் ஷிகர் தவான் (4 ரன்கள்) ஏமாற்றினாலும், ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலி ஆகியோர் சரியான பதிலடி கொடுத்தனர். விராட் கோலி 107 பந்துகளில் 140 ரன்கள் குவித்து அவுட் ஆனார். ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 152 ரன்களும் (117 பந்துகள்), ராயுடு 22 ரன்களும் (26 பந்துகள்) எடுத்து 43-வது ஓவரிலேயே அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதனால் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.