Afghanistan vs India World Cup 2019 Score: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று (ஜூன்.22) சவுத்தாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதின.
இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டும் எடுத்தது. அதிகபட்சமாக, விராட் கோலி 67 ரன்களும், கேதர் ஜாதவ் 52 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 49.5வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் எடுத்து தோற்றது. தொடக்கத்தில் இருந்து கடைசி ஓவர் வரை, இந்திய அணியை பாடாய்படுத்திய ஆப்கன் அணியில், அதிகபட்சமாக முகமது நபி 52 ரன்கள் எடுத்து, கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டான பிறகே, வெற்றி இந்தியா வசமானது.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட, அந்த ஓவரில் 4 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து, ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றி, முகமது ஷமி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தார்.
Live Blog
World Cup 2019 LIVE: India vs Afghanistan Live Score, IND vs AFG 2019 Live Updates, The Rose Bowl,Southampton: இந்தியா vs ஆப்கானிஸ்தான் லைவ் கிரிக்கெட் ஸ்கோர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
49.5வது பந்தையும் துல்லியமாக ஷமி வீச, 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது.
ஆலம் - அவுட்.
அவர் என்ன பண்ணுவார் பாவம்! முதல் பந்தை சுற்றினார். பந்து ஸ்டம்ப்பை சுற்றியது. 0 ரன்களில் அவுட்
முகமது நபி - அவுட்
நபி ஸ்ட்ரெய்ட்டில் தூக்கி அடிக்க, ஹர்திக் பாண்ட்யா எந்தவித சிரமும் இன்றி அதனை கேட்ச்சாக்க, 52 ரன்களில், நீண்ட நேரமாக போராடிய நபி வெளியேறினார்.
முகமது நபி - 0
முகமது நபி - 4 ரன்கள்
49வது ஓவரை வீசிய பும்ரா, அந்த ஓவரில், 5 ரன்களை மட்டும் விட்டுக் கொடுக்க, ஆப்கன் வெற்றிப் பெற 16 ரன்கள் தேவை.
ஆப்கானிஸ்தான் அணி 3 ஓவர்களில், வெற்றிப் பெற 24 ரன்கள் எடுக்க வேண்டும். கைவசம் 3 விக்கெட்டுகள், அதைவிட முக்கியம், முகமது நபி ஸ்டிரைக்கில் இருப்பது.
46.3வது ஓவரில், ஆப்கானிஸ்தான் 200 ரன்களை தொட்டுள்ளது. அதுவும், பும்ரா ஓவரில், அட்டகாசமான லெக் சைட் சிக்ஸருடன் 200 ரன்களை கடக்க வைத்தார் முகமது நபி.
ஆப்கானிஸ்தான் அணி 45 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா எட்டடி பாய்ந்தால், ஆப்கானிஸ்தான் 16 அடி பாய்கிறது. வெற்றிக்கு மிக அருகில் ஆப்கானிஸ்தான் இருக்க, இந்திய ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட பிரஷர்.
ஓருவழியாக, போக்கு காட்டிக் கொண்டிருந்த சத்ரான், 21 ரன்களில் ஹர்திக் பாண்ட்யா ஓவரில் கேட்ச் ஆனார். ஆனால், இப்போதும் உள்ள ஒரு குடைச்சல் என்னவெனில், முகமது நபி களத்தில் இருப்பது...
விடாது கருப்பு!!!
40 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் 157 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிப் பெற 68 ரன்களே தேவை. இந்த உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா ஆடிய ஆட்டத்திலேயே அதிக பிரஷரை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஆட்டம் இது தான்.
38.5வது ஓவரில், ஆப்கானிஸ்தான் 150 ரன்களை எட்டியுள்ளது, 5 விக்கெட்டுகளை இழந்து. மீண்டும் ஆட்டம், ஆப்கன் பக்கம் திரும்புவது போல் தெரிகிறதே....
பும்ராவின் இரு ஸ்டிரைக்கிற்கு பிறகு, சாஹலின் அபாரமான டர்னில், அஷ்கர் அஃப்கன் 8 ரன்களில் போல்டானார். காற்று மீண்டும் இந்தியா பக்கம் வீசத் தொடங்கியிருப்பது போல் தெரிகிறது. மீதமுள்ள 90 ரன்களை இலக்கை 5 விக்கெட்டுகளை கொண்டு ஆப்கானிஸ்தான் அடிக்குமா?
29வது ஓவரை வீசிய பும்ரா, ரன் ஏதும் இரண்டு விக்கெட்டுகளை காலி செய்தார். ரஹ்மத் ஷா, ஷாஹிதி ஆகிய இரண்டு Well Set பேட்ஸ்மேன்கள் இருவரையும் அந்த ஓவரில் வீழ்த்தினார்.
ஸ்பின்னில் எந்த தாக்கமும் ஏற்படுத்த முடியாததால், மீண்டும் பும்ராவை பந்து வீச அழைத்திருக்கிறார் கேப்டன் கோலி. ஓவர் செல்ல செல்ல ரசிகர்களுக்கும் டென்ஷன் அதிகரிக்கிறது, கேப்டனுக்கும் டென்ஷன் அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, 26.3வது ஓவரில், ஆப்கானிஸ்தான் 100 ரன்களை எட்டியுள்ளது. வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து!.
ஆப்கானிஸ்தான் 24 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி வெற்றிப் பெற இன்னும் 138 ரன்கள் மட்டுமே தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன. இந்தியாவின் ஸ்பின் பந்துவீச்சிலும் பெரிதாக தாக்கம் ஏதும் இல்லை.
இந்திய பந்துவீச்சின் போது, ஷமி பந்து வீச்சில் ரிவியூ கேட்ட பொழுது, அம்பயரிடம் <பேசிய விராட் கோலியின் மாடுலேஷன் இப்போது வைரலாகி வருகிறது. அம்பயரிடம் பாவமாக கெஞ்சுவது போல் உள்ள அவரது முக பாவனை தான் தற்போது, மீம்ஸ்களில் நம்பர்.1
ஷமி, பும்ரா, பாண்ட்யா, சாஹல், குல்தீப் என 16 ஓவர்களுக்குள் 5 பவுலர்கள் பந்து வீசிவிட்டனர். ஆனால், ஷமி தவிர யாருக்கும் விக்கெட் கிடைக்கவில்லை. ஆப்கனும், இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்து தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தது. ஆனால், இறுதியில், பாண்ட்யா பந்தில் டாப் எட்ஜ் ஆன, ஆப்கன் கேப்டன் நைப், 27 ரன்களில் விஜய் ஷங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்,
13 ஓவர்கள் முடிவில், ஆப்கானிஸ்தான் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்துள்ளது. முதல் விக்கெட்டை இழந்தாலும், அவர்களின் பேட்டிங்கில் எந்தவித தடுமாற்றமோ, சுணக்கமோ இல்லை என்பதே உண்மை. நிச்சயம் இந்தியா ஏதாவது மேஜிக் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
உலகக் கோப்பை 2019 தொடரில் இந்தியா vs ஸ்பின் பவுலிங் இதுவரை...
முதல் மூன்று போட்டியில் : 53 ஓவர்கள் - 0 விக்கெட்டுகள் - எகானமி ரன் ரேட் - 6.39
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக : 34 ஓவர்கள் - 5 விக்கெட்டுகள் - எகானமி ரன் ரேட் - 3.50
Express Pace-ல் இந்தியா பவுலிங் செய்தால், அதனால் பாதிப்பு இந்தியாவுக்கு தான். அவர்களுக்கான இலக்கு குறைவு. நாம் எவ்வளவு வேகமாக வீசினாலும், அதை அடிக்க வேண்டிய, குறைந்தபட்சம் தொட வேண்டிய கட்டாயம் கூட அவர்களுக்கு கிடையாது. ஸோ, ஆரம்பத்திலேயே ஸ்பின் பந்து வீச்சு கொண்டு அவர்களை அட்டாக் செய்வதே டீசன்ட் யோசனையாக இருக்க முடியும்.
இதோ முதல் விக்கெட்...
ஷமி ஓவரில், ஹஸ்ரதுல்லா சசாய் 10 ரன்களில், தனது ஆஃப் ஸ்டம்ப்பை பறிகொடுக்க, ஆப்கன் தனது முதல் விக்கெட்டை இழந்தது.
அடுத்து பாருய்யா... எங்க தல பும்ரா லெக் ஸ்டம்ப்பை காலி பண்ணுவாரு!!.
உண்மையில், இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஜெயிக்க அருமையான வாய்ப்பு இருக்கிறது. ரன் ரேட் 4.50 இருந்தால் போதும். விக்கெட்டுகளை இழக்காமல், மிக நிதானமாக ஆடினாலே, ஆப்கானிஸ்தான் எளிதில் வெற்றிப் பெற முடியும். பும்ராவையும், குல்தீப்பையும் அவர்கள் கவனமாக எதிர்கொண்டுவிட்டால், நிச்சயம் வெற்றி உறுதி.
ஆனால், இந்தியாவுக்கு ஒவ்வொரு ஓவரும், ஒவ்வொரு பந்தும் மிக மிக முக்கியமானது.
ஸ்பின் பந்துவீச்சு நன்றாக ஒர்க் அவுட் ஆன நிலையிலும், இந்திய அணி கேப்டன் வேகப்பந்து வீச்சை வைத்தே பவுலிங் அட்டாக்கை தொடங்கியுள்ளார். ஷமி, பும்ரா பவுலிங் செய்து வருகின்றனர். விராட்டின் 'பிளான் A' என்ன என்பதை அறிய ஆவலாக இருக்கிறது.
225 ரன்கள் எனும் எளிய இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியுள்ளது.
தேவைப்படும் ரன் ரேட் 4.50 மட்டுமே.
சாதிக்குமா ஆப்கன்?
50 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் பவுலர்களின் மிரட்டலான ஸ்லோ பந்துவீச்சில், இந்திய மிடில் ஆர்டர் + லோ ஆர்டர் படு மோசமாக சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது. சில விக்கெட்டுகளை, நமது பேட்ஸ்மேன்களே தாரை வார்த்தது தான் கொடுமையின் உச்சம்!
45.5வது பந்தில் 200 ரன்களைக் கடந்திருக்கிறது இந்திய அணி. முழுக்க முழுக்க ஸ்லோ பந்துகள் மூலம், இந்திய பேட்டிங் ஆர்டரை திணறடித்துவிட்டது ஆப்கானிஸ்தான். இறுதிவரை, பவுலிங் அட்டாக்கில், ஆப்கன் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை.
தோனியின் நிதானத்தை, ஆப்கன் ஸ்பின்னர்கள் ரொம்பவே இன்று சோதித்துவிட்டனர். இறுதியில், ரஷித் கான் ஓவரில், இறங்கி வந்து ஆடிய தோனி, 28 ரன்களில் ஸ்டெம்பிங் செய்யப்பட, அவரது வழக்கமான ஸ்டைலில் விறு விறு மோடில் பெவிலியன் திரும்பினார்.
குறிப்பு: தோனி 52 பந்துகளில் 28 ரன்கள்
இந்திய அணி 42 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. தோனி, ஜாதவ் ஆகிய இரு பேட்ஸ்மேன்களும், களத்தில் தங்களை நிலை நிறுத்துக் கொள்ள கிட்டத்தட்ட தலா 50 பந்துகளை உட்கொண்டு இருக்கின்றனர்.
260 ரன்கள் வந்தாலே பெரிய விஷயமோ!!
உண்மையில் இந்தியாவின் வழக்கமான Template-ஐ உடைத்திருக்கிறது ஆப்கானிஸ்தான். இந்திய ஓப்பனிங் சொதப்பினால், இந்தியாவின் நிலைமை இதுதான் என்பதற்கு, இப்போட்டி ஒரு லேசான உதாரணம் அவ்வளவே.
இந்தியாவுக்கு எதிராக இனி வரும் போட்டிகளில் ஆடும் அணிகள், மீண்டும் இதுகுறித்து நோட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
36 ஓவர்கள் முடிவில், இந்தியா 152-4
பொதுவாக, சேஸிங் செய்யும் அணிக்கு தான் Asking Rate என்னவென்று கேட்பார்கள்.. நாம் உங்களிடம் கேள்வி கேட்பதால் (Asking), ஒரு சேஞ்சுக்காக இப்படி மாற்றுவோம். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் Asking Rate என்னவாக இருக்கப் போகிறது? அதாவது, இந்திய அணி 50 ஓவர்களில் எவ்வளவு அடிக்க வேண்டும்?, அதற்கு என்ன ரன் ரேட்டில் இந்தியா ஆட வேண்டும்?
உங்கள் கணிப்பு என்ன?
கோலியிடம் நாம் ஒரு பிரச்சனையை காண முடிகிறது... அது என்னவென்று தெரியுமா? ஒருநாள் போட்டிகளில், அவரது தனது கடைசி மூன்று அரை சதங்களையும், சதங்களாக மாற்ற முடியாமல் தோல்வியுற்று இருக்கிறார்.
அவரது கடைசி மூன்று அரைசதம் ஸ்கோர் - 82,77,67.
இதற்கு முன்னதாக, 2011-12ம் ஆண்டில் தான் அவர் தொடர்ந்து மூன்று அரை சதங்களை, சதமாக மாற்ற முடியாமல் தடுமாறி இருக்கிறார்.. (80 vs WI, 77 vs SL, 66 vs SL)
இங்கே என்ன நடக்கிறது? கேப்டன் விராட் கோலி, முகமது நபி ஓவரில், கட் ஷாட் ஆட முயல, பந்து திக் எட்ஜ் ஆகி, தேர்ட் மேனிடம் கேட்ச் ஆனது. ஸோ, விராட் கோலி 67 ரன்களில் அவுட். களத்தில் தோனி, கேதர் ஜாதவ்.
எனக்கு, 2003 உலகக் கோப்பையில் நடந்த இந்தியா - நெதர்லாந்து ஆட்டத்தை இப்போட்டி நினைவுப்படுத்துகிறது.
ரசிகர்களுக்கு இது உண்மையில் மகிழ்ச்சியான தருணம் தான். களத்தில் இறங்கியிருப்பது தோனியாச்சே!!
28 ஓவர்கள் முடிவில், இந்தியா 125- 3
ரஹ்மாத் ஷா ஓவரில் ஸ்வீப் ஆட முயன்ற விஜய் ஷங்கர் 41 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் மூன்று விக்கெட்டுகளும், ஆப்கன் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்துள்ளது. அதிலும், ரஹ்மத் ஷா ஒரு 'Dibbly Dobbly' பௌலர் தான். அவரது ஓவரை எல்லாம் நின்று சாத்தலாம். ஆனால், விக்கெட்-லாம் டூ மச்!.
பிட்ச், கொஞ்சம் பேட்டிங் சப்போர்ட் பண்ணும் என்பதால், விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால், முஜீப் உர் ரஹ்மானின், வாவ் டர்ன் ஸ்பின் பந்தில் அவர் போல்டானார். ஆனால், வேகப்பந்துவீச்சு அவ்வளவாக இல்லை. மீண்டும் முகமது நபி ஓவரில் இந்திய பேட்ஸ்மேன்கள் தவறினர். ஆனால், டேஞ்சரஸ் ஸ்பின்னர் ரஷித் கான் ஓவரில், கோலியும், விஜய்யும் ஸ்மார்ட் பிளே ஆடுகின்றனர். அவரது பவுலிங்கில் வேரியேஷன் இல்லை. அட்டாக்கும் இல்லை. அதேசமயம், தொடக்கத்தில் சீராக அதிகரித்த ரன் ரேட், மீண்டும் சரிந்து, இப்போது மீண்டும் லைட்டாக மேலே வர ஆரம்பிக்கிறது.
சரியான டகால்டி பிட்ச்சா இருக்கும் போலயே!!
'பாரத் ஆர்மி' கேப்டன் விராட் கோலி 48 பந்துகளில் தனது அரை சத்தை பூர்த்தி செய்திருக்கிறார். இது அவரது 52வது அரைசதம் ஆகும்.
ரோஹித் அடிக்கலைனா கோலி அடிக்கணும்-ங்கறது எழுதப்படாத விதி போல... அஞ்சாரு வருஷமா, இப்படிதான் வண்டி ஓடிக்கிட்டு இருக்கு!!
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தடுமாறுகிறதா?
ஆம்! தற்போதைய 19 ஓவர்கள் வரை இந்தியா தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறது. அபார பந்துவீச்சில், ரோஹித் ஷர்மா அவுட் செய்யப்பட்டாலும், வான்ட்டடாக கொடுத்த விக்கெட் லோகேஷ் ராகுலுடையது. ராகுல் அவுட்டான பிறகு, இந்தியாவின் ரன் ரேட் முற்றிலும் சரிந்திருக்கிறது. குறிப்பாக, ஸ்பின் ஓவர்களில், இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறி வருகிறார்கள். 20வது ஓவரில் தான் ரஷித் கான் பந்து வீசவே வந்திருக்கிறார்.
ரோஹித், ராகுல் என இருவருமே விரைவில் அவ்ட்டாக, '3D' பிளேயர் விஜய் ஷங்கருக்கு பேட்டிங்கில் தனது வலிமையைக் காட்ட அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும், கேப்டன் விராட் கோலியை நான் ஸ்டிரைக்கில் வைத்துக் கொண்டு... எப்படியாவது ஒரு 50 அடித்துவிட்டால் கூட, அவர் மீதான கேப்டனின் நம்பிக்கையை இன்னும் 100 சதவிகிதம் அதிகரித்துவிட முடியும்.
ஏன்பா இப்போ ரிவர்ஸ் ஸ்வீப் ரொம்ப அவசியமா?
நன்றாக செட் ஆகி ஆடிக் கொண்டிருந்த லோகேஷ் ராகுல், நபி ஓவரில் தேவையில்லாமல் ஸ்வீப் ஆட முயல, பந்து டாப் எட்ஜ் ஆகி, தேர்டு மேனில் நின்றிருந்த சசாய் கைகளில் தஞ்சமடைய, 53 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து கேட்ச் ஆனார்.
சும்மா லெக் சைடில் அடிச்சிருந்தாலே பந்து பவுண்டரி போயிருக்கும் போல!!!
57/1
விராட் கோலி - லோகேஷ் ராகுல் இணை இரண்டாவது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்துள்ளது.
ஆக இன்னைக்கு, கிங் கோலி கிட்ட இருந்து ஒரு செஞ்சுரி எதிர்பார்க்கலாம் போல... மனிதர் 100 ஸ்டிரைக் ரேட் தாண்டி அடிச்சிக்கிட்டு இருக்காரு.
முஜீப் உர் ரஹ்மான் ஸ்பின் பந்துவீச்சில், Bite இருப்பது போன்று தெரியவில்லை. ஆனால், வேரியேஷன்களில் மிரட்டுகிறார். அதாவது, கையை அவர் வீசும் வேகத்தைவிட, பந்து தரையில் படும் வேகம் குறைவாக இருக்கிறது. இதனால், பேட்ஸ்மேன்களின் கெஸ்ஸிங் பொய்யாக அதிக வாய்ப்புள்ளது.
இதுவரை, ரோஹித்தின் ஆட்டத்தை தொடர்ச்சியாக கவனித்து வந்தவர்களுக்கு நிச்சயம் தெரியும், ரோஹித் ஷர்மாவிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சனை Slow BackLift என்று. ஓப்பனிங் பேட்ஸ்மேனான ரோஹித்தின் பேட்டிங் நகர்வுகள், முதல் 10 ஓவர்களுக்கு ஸ்லோவாகவே இருக்கும். பவுலரின் வேகத்துக்கு ஏற்ப, அவரது Bat Operation அவ்வளவாக இருக்காது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய் போல... இன்றைய ஆட்டத்திலும், அவரது பேட்டிங் போக்கு அப்படித்தான் இருந்தது. இறுதியில், முஜீப்பிடம் ஏமாந்து போய், தனது ஸ்டெம்ப்புகளை பறிகொடுத்திருக்கிறார்.
போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் நகரில், மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்ல மிதமான வெயில் அடிக்கும். காற்றும் வேகமாக இருக்காது. ஆகையால், முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு, பெரியளவில் பவுலிங் அச்சுறுத்தல் இருக்காது எனலாம். இருப்பினும், இங்கிலாந்து வானிலை என்பது எப்போதும் கணிக்க முடியாத ஒன்று என்பதால், எப்போது வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.
10 பந்துகளை சந்தித்த ரோஹித் ஷர்மா, முஜீப் உர் ரஹ்மானின் ஸ்பின் பந்துவீச்சில், லேட் ஷாட் ஆடப் போய், பந்தை உள்ளே விட, பந்து ஸ்டெம்ப்புகளை காலி செய்தன.
ஆப்கனோ, ஆஸ்திரேலியாவோ... இந்த உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணி ஃபாலோ செய்துவரும் முதல் விஷயம், நிதானமான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தல் ஆகும். ரோஹித் - தவான் ஜோடி, 50+ பார்ட்னர்ஷிப் கொடுத்துவிட்டால், இந்தியாவின் வெற்றி சதவிகிதம் 60 ஆகும். அதுவே 75+ லிருந்து 100+ பார்டனர்ஷிப் கொடுத்தால், வெற்றி சதவிகிதம் 80 ஆக எகிறுகிறது. இருப்பினும், தவான் இல்லாத பட்சத்திலும், லோகேஷ் ராகுல் மீது இந்திய அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. ஸோ, இந்தப் போட்டியை பொறுத்தவரை, இந்திய அணி நிதானமான ஓப்பனிங்கை தனது முதல் டார்கெட்டாக கொண்டு ஆடும் என்பதில் சந்தேகமேயில்லை.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கியுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்த ஜோடி, பார்ட்னர்ஷிப்பில் சதம் அடித்திருந்தது. ஸோ, இன்று மீண்டும் ஒரு மெகா ஓப்பனிங் வைக்க, அற்புதமான பிளாட்ஃபார்ம் கிடைத்திருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நேயர்களுக்கு முழுமையான வணக்கம். மழைக்கு ஏதும் வாய்ப்பின்றி, இன்று முழுமையான ஆட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருப்பதால், உங்களுக்கும் முழுமையான வணக்கம். டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் ஒரேயொரு மாற்றமாக புவனேஷ் குமாருக்கு பதிலாக முகமது ஷமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.