Ind vs Afg World Cup 2019 Match Date, Time, Players List, Weather Forecast: உலகக் கோப்பை 2019 தொடரில், இன்று(ஜூன்.22) சவுத்தாம்ப்டன் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், குல்பாதின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
இதுவரை, நான்கு போட்டிகளில் ஆடியுள்ள இந்திய அணி 3 வெற்றியைப் பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
ஆப்கானிஸ்தானை பொறுத்தவை, அந்த அணி ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறிவிட்டது எனலாம். 5 போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் தோல்வியைத் தழுவியுள்ளது. குறைந்தபட்சம் எதிரணிக்கு டஃப் கூட கொடுக்காமல் சரண்டராகி வருகிறது. பயிற்சிப் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கானிஸ்தான், லீக் போட்டிகளில் மிக மோசமாக தடுமாறி வருகிறது.
இந்தியா – ஆப்கன் போட்டியின் டாஸ், இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு போடப்படும். பிற்பகல் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் போட்டியை லைவாக காணலாம். ஆன்லைனில் ஹாட்ஸ்டார் ப்ரீமியமில் போட்டியை பார்க்க முடியும். உங்கள் மொபைலில் ‘ஷேர் இட்’ ஆப் வைத்திருந்தால், அதன் வாயிலாக, ஹாட்ஸ்டார் மூலம் போட்டியை காணலாம்.
அதுமட்டுமின்றி, நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளம் வழங்கும் பிரத்யேக லைவ் ஸ்கோர் கார்டு மற்றும் லைவ் அப்டேட்ஸ் மூலம், ஆட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் துல்லியமாக நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
மழைக்கான வாய்ப்பு – 0%
ஈரப்பதம் – 83%
காற்று – 2 km/h
அதிகபட்ச வெப்பநிலை – 20 டிகிரி செல்சியஸ்
குறைந்தபட்ச வெப்பநிலை – 12 டிகிரி செல்சியஸ்
அப்புறம் என்ன… ஜாலியா வீட்டுல உட்கார்ந்து மேட்ச பாருங்க!!
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Ind vs afg world cup 2019 when and where to watch live streaming