scorecardresearch

IND vs AUS 1st ODI: ரோகித் இல்லை, ஸ்ரேயாஸ் காயம்… இந்தியா பிளேயிங் 11-ல் யாருக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது ஸ்ரேயாசுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

IND vs AUS 1st ODI: India's Predicted Playing 11 in tamil
India vs Australia 1st ODI, playing 11 Prediction Tamil News

IND Vs AUS 1st ODI, Probable Playing 11 Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை – மார்ச் 17ம் தேதி) மும்பையில் தொடங்குகிறது. இந்த தொடர், இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடருக்கு இரு அணிகளுக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. எனவே, இத்தொடரைக் கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆஸ்திரேலிய அணியின் வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் டெஸ்ட் தொடரின் போது தனது தாயை இழந்ததைத் தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் சொந்த நாட்டிலே தங்க முடிவு செய்துள்ளார். இதனால், இந்த தொடரில் ஆஸ்திரேலியாவை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்த உள்ளார். இதற்கிடையில், குடும்ப பொறுப்புகள் காரணமாக தொடரின் தொடக்க ஆட்டத்தில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா விலகியுள்ளார். எனவே, இந்திய அணியை ஆல்-ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார். அதே நேரத்தில் ரோகித் 2வது ஆட்டத்தில் இருந்து அணிக்கு தலைமை தங்குவார்.

இந்தியாவின் ப்ளேயிங் லெவன் அணியைப் பொறுத்தவரை, கேப்டன் ரோகித் இல்லாத முதல் ஆட்டத்தில் இஷான் கிஷனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், ஷுப்மான் கில் அவருடன் இணைந்து விளையாடுவார். கே.எல்.ராகுலும் அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவர் 5வது இடத்தில் பேட் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் அவருக்கு அணி நிர்வாகம் சில காலம் வழங்கி இருக்கிறது. அதில் அவரை நிருப்பிப்பார் என்று நம்பலாம்.

விராட் கோலி வழக்கம் போல் 3வது இடத்தில் பேட்டிங் செய்வார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் தான் இந்திய அணியின் முக்கிய கவலையாக இருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. மேலும், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் முதல் சில போட்டிகளுடன் ஒருநாள் தொடரையும் அவர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர் இல்லாத நிலையில், அவரது இடத்தில் சூரியகுமார் யாதவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா 6வது இடத்தில் இருப்பார். அதே நேரத்தில் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் அணியில் மீண்டும் இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. அவர் ஜூலை 2022 க்குப் பிறகு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார். ஜடேஜாவின் வருகையால் அக்சர் படேல் வாய்ப்பு கிடைப்பது கடினமாக இருக்கும். மேலும் அவருக்கு முன்னால் ஆஃப்-ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரில் யாருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அணி நிர்வாகம் உலகக் கோப்பைக்கு முன்னால் சாஹலை முயற்சிக்க விரும்பலாம். வேகப்பந்து வீச்சு வரிசையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், முகமது ஷமி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் களமாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உம்ரான் மாலிக் மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் தங்கள் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கும்.

இந்தியா vs ஆஸ்திரேலியா, முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணியின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்

இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், விராட் கோலி, கே.எல் ராகுல், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ்.

இந்திய ஒருநாள் அணி

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs aus 1st odi indias predicted playing 11 in tamil