scorecardresearch

அடித்துச் சொன்ன டி.கே… மறுத்துப் பேசிய முன்னாள் ஆஸி,. வீரர்… இறுதி முடிவை நீங்களே பாருங்க!

நாக்பூர் டெஸ்டில் இந்திய அணி ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்யும் என்ற தினேஷ் கார்த்திக்கின் தைரியமாக கணிப்பு அப்படியே நடந்துள்ளது.

Ind vs aus 1st test, Mark Waugh - Dinesh Karthik prediction proves accurate in BGT 2023 Tamil News
Dinesh Karthik made a bold prediction and said that the home side will bat only once in the Nagpur Test Tamil News

India vs Australia, Dinesh Karthik – Mark Waugh  Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடந்தது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடிய இந்தியா 400 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இந்திய அணியில் அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சதம் விளாசினார். அரைசதம் அடித்த ஜடேஜா 70 ரன்களும், அக்சர் படேல் 84 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, இன்று 3ம் நாள் ஆட்ட நேரத்தில் 2வது இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா 91 ரன்னில் சுருண்டது. இதனால், இந்திய அணி 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்த அசத்தல் வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.

அடித்துச் சொன்ன டி.கே… மறுத்துப் பேசிய முன்னாள் ஆஸி,. வீரர்… இறுதி முடிவை நீங்களே பாருங்க!

இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்திலேயே கணித்த வர்ணனையாளர் தினேஷ் கார்த்திக்கின் கணிப்பு உறுதியாகியுள்ளது. இப்போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது வர்ணனையில் பெட்டியில் இருந்தவாறு பேசிய தினேஷ் கார்த்திக், ‘இந்தியா ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்யும் என்றார். அவர் பேசிக்கொண்டிருந்த போதே குறுக்கிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் சக வர்ணனையாளருமான மார்க் வாக், ‘ஓ அப்படியா அதையும் பார்த்துவிடலாம்’ என்றார். ‘எனது கணிப்பு இதுதான்’ என்று தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒருமுறை அடித்து சொன்னார்.

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் கணித்ததைப் போலேவே இந்தியா முதல் இன்னிங்சில் மட்டுமே பேட்டிங் செய்தது. மேலும், 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றி என அபார வெற்றியை ருசித்தது இந்தியா.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs aus 1st test mark waugh dinesh karthik prediction proves accurate in bgt 2023 tamil news