Advertisment

IND vs AUS 1st Test: அஸ்வின் - ஜடேஜா அபாரம் : இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி

இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து அணி நிர்வாகத்தை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

author-image
WebDesk
Feb 09, 2023 13:05 IST
IND vs AUS 1st Test: Netizens slam team management for leaving Shubman Gill out Tamil News

IND vs AUS 1st Test: The Indian team management has decided to rest Shubman Gill

Border - Gavaskar trophy 2023, Shubman Gill Tamil News: இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில், பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று (வியாழக்கிழமை) முதல் நடக்கிறது.

Advertisment

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி தரப்பில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் களமாடியுள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கொடுக்காதது குறித்து அணி நிர்வாகத்தை இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

publive-image

ஷுப்மான் கில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகம் கவனம் ஈர்க்கும் இந்திய வீரராக வலம் வருகிறார். சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் இலங்கைக்கு எதிராக தொடர்களில் சதம், இரட்டை சதம் விளாசி, ரெட் ஹாட் ஃபார்மில் இருக்கிறார். தவிர, ஆஸ்திரேலியாவின் கபாவில் இந்தியா பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு அடித்தளம் அமைத்து இருந்தார்.

அவர் தற்போது அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த இந்தியாவின் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை, கில் 13 போட்டிகளில் 736 ரன்கள் எடுத்துள்ளார். அவரது 57.68 சராசரி ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 110 ஆகவும் உள்ளது.

publive-image

இந்த நிலையில், இந்திய அணி நிர்வாகம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஷுப்மான் கில்லுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அணி நிர்வாகத்தை இணைய வாசிகள் திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும், கில்லுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இரு அணியில் விளையாடும் லெவன் வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

ஆஸ்திரேலியா:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், மாட் ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லியான், டாட் மர்பி, ஸ்காட் போலண்ட்.

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

#Cricket #Sports #India Vs Australia #Shubman Gill #Indian Cricket #Indian Cricket Team
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment