Mohammed Shami and Mohammed Siraj record vs Australia Tamil News: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நாளை தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்டர்-கவாஸ்கர் டிராபிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், அனைவரது கவனமும் சுழற்பந்து வீச்சாளர்கள் மீது இருக்கும். குறிப்பாக, இந்தியாவின் அஷ்வின், ஜடேஜா, அக்சர் மற்றும் ஆஸ்திரேலியாவின் நாதன் லியான் போன்றவர்கள் நாக்பூர் ரேங்க் டர்னர் ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களின் அச்சுறுத்தலை தொடங்கும் முன், இரண்டு முன்னணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள், முகமது ஷமி மற்றும் சிராஜ் வலிமைமிக்க ஆஸ்திரேலியர்களுக்கு எதிராக எவ்வாறு செயல்பட்டார்கள் என்பதை இங்கு பார்க்கலாம்.
முகமது ஷமி vs ஆஸ்திரேலியா</strong>

இன்னிங்ஸ்: 15
விக்கெட்டுகள்: 31
எக்கனாமி: 3.55
விட்டுக்கொடுத்த ரன்கள்: 997
சராசரி: 32.16
சிறந்த பந்துவீச்சு: 6/56
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சில ஆட்டங்களில் இந்திய வேகப்பந்து வீச்சாளரான ஷமி சிறப்பான வெற்றியை தேடித் தந்துள்ளார். அவர் 3.55 என்ற எக்கனாமியில் 31 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் பலமுறை புதிய மற்றும் பழைய பந்தில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
முகமது சிராஜ் vs ஆஸ்திரேலியா

இன்னிங்ஸ்: 6
விக்கெட்டுகள்: 13
எக்கனாமி : 2.85
விட்டுக்கொடுத்த ரன்கள்: 384
சராசரி: 29.53
சிறந்த பந்துவீச்சு: 6/150
ஷமிக்கு நிகரான அனுபவம் சிராஜுக்கு இல்லை. அவரை விட 9 இன்னிங்ஸ் குறைவாகவே விளையாடியுள்ளார். ஆனால் அவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 இன்னிங்ஸ்களில் 2.85 என்ற எக்கனாமியில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
தற்போது ரெட் ஹாட் ஃபார்மில் இருக்கும் சிராஜ் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மிகவும் சிறப்பாக பந்துவீசி இருந்தார். சிவப்பு-பந்து முற்றிலும் மாறுபட்ட விளையாட்டாக இருந்தாலும், சிராஜ் தனது தொடக்க ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறன் படைத்தவராகவும், தேவையான நேரத்தில் விக்கெட் எடுப்பவராகவும் உள்ளார்.
பேட்டிங்கில் பலம் சேர்க்கும் கோலி – புஜாரா

பேட்டிங் பிரிவில், விராட் கோலி மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான பதிவுகளை வைத்துள்ளனர். அந்த அணிக்கு எதிராக விளையாடிய 36 இன்னிங்ஸ்களில், கோலி 48 சராசரி மற்றும் 52 ஸ்ட்ரைக் ரேட்டில் 1682 ரன்களைக் குவித்துள்ளார். மறுபுறம், புஜாரா 54 சராசரி மற்றும் 42 ஸ்ட்ரைக் ரேட்டில் 1893 ரன்களைக் குவித்துள்ளார். மேலும், அவர் 5 சதம் மற்றும் 10 அரைசதங்களையும் விளாசியுள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 204 ஆகும்.
இதையும் படியுங்கள்: கோலி vs புஜாரா… ஆஸி.,க்கு எதிராக பெஸ்ட் பிளேயர் யார்?
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil