/tamil-ie/media/media_files/uploads/2020/12/india-vs-australia-1.jpg)
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான நேற்று, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 195 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்ஸில் ஆட்டநேர இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன் எடுத்தது.
இரண்டாவது நாளான இன்று , 36/1 என்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்து இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் சேர்த்தது. இன்றைய ஆட்ட நேர முடிவில், இந்தியா 82 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
இரண்டாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி வீரர்கள் கில் ( 45 ) , சட்டீஸ்வர் புஜாரா (17) ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அஜின்க்யா ரகானே, ஹனுமா விஹாரி நிதானமாக விளையாடினர். இருப்பினும், நேத்தன் லியோன் வீசிய பந்தில் விஹாரி தேவையற்ற ஷாட் விளையாடி ஸ்மித்திடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ரகானே தொடர்ந்து விளையாடினாலும், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் ரன்னை இந்தியா சமன் செய்யுமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்து
பின்னர், களமிறங்கிய ரிஷாபத் பந்த் ஆட்டத்தை போக்கை மாற்றியமைத்தார்.வெறும், 40 பந்தில் 29 ரன் எடுத்ததன் மூலம், இந்திய அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். இருப்பினும், மிச்சல் ஸ்டார்க் பந்தில் விக்கெட்டை பறி கொடுத்தார்.
Ajinkya Rahane's 12th Test ton - and one of his best! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvINDpic.twitter.com/hfUBIhI5qZ
— cricket.com.au (@cricketcomau) December 27, 2020
மறுமுனையில் நிலைத்து ஆடிய ரகானே தனது 12வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். 200 பந்தில் 12 பவுண்டரியுடன் ரகானே 104 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.