IND vs AUS Chennai Weather Report for 3rd ODI Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. அடுத்ததாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
அதன்படி, மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற சம நிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா
சென்னை வெதர் ரிப்போர்ட்
இந்நிலையில், 3வது ஒருநாள் போட்டி நடக்கும் தமிழ்நாட்டின் சென்னையில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘புதன்கிழமை சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, லேசானது முதல் மிதமான மழை மற்றும் பலத்த காற்று (மணிக்கு 30-40 கிமீ) மிக அதிகமாக இருக்கும். போட்டி நாள் அன்று சென்னையில் மிதமான மழை ஓரிரு முறை பெய்யக்கூடும். எனினும், வெயில் 32 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் மற்றும் மங்கலான நாளாக இருக்கும். ஆனால் மாலையில் அந்த குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரியாக குறையும். மழை பெய்ய 50 சதவீதம் வாய்ப்புள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil