/indian-express-tamil/media/media_files/2025/10/25/ind-vs-aus-3rd-odi-live-score-updates-india-vs-australia-3rd-odi-sydney-live-scorecard-online-streaming-in-tamil-2025-10-25-07-49-13.jpg)
IND vs AUS 3rd ODI Highlights, India vs Australia 3rd ODI, Sydney: இந்தியா - ஆஸ்திரேலியா 3வது ஒருநாள் போட்டி, சிட்னி.
India vs Australia 3rd ODI Highlights: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இதில், பெர்த்தில் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், அடிலெய்டில் நடந்த போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வென்றது. இதன் மூலம் அந்த அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் (இந்திய நேரப்படி) இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்றது
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில், அந்த அணியில் தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் - டிராவிஸ் ஹெட் ஜோடி களம் புகுந்தனர். அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில், ஹெட் 29 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 41 ரன்னிலும் அவுட் ஆகி வெளியேறினர். இதன்பிறகு மேட் ரென்ஷா - மேத்யூ ஷார்ட் ஜோடி அமைத்தனர். இதில் ரென்ஷா ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன.
மேத்யூ ஷார்ட் (30 ரன்), அலெக்ஸ் கேரி (24 ரன்), மிட்செல் ஓவன் (1 ரன்), ஸ்டார்க் (2 ரன்), நாதன் எல்லீஸ் (16 ரன்) என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நிலைத்து நின்று ஆடிய ரென்ஷா அரைசதம் அடித்து 56 ரன்னில் அவுட் ஆனார். 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டையும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டையும், சிராஜ், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்தியா பேட்டிங்
இதனைத் தொடர்ந்து, 237 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் - ரோகித் சர்மா ஜோடி களமாடினர். அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுக்க பந்துகளை விரட்டிய இந்த ஜோடியில் கில் 24 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதன் பிறகு ஜோடி அமைத்த ரோகித் - கோலி தங்களது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருவரும் அசத்தலாக ஆடி அரைசதம் அடித்து அசத்தினார். இவர்களது ஜோடியை உடைக்க ஆஸ்திரேலிய பவுலர்கள் கடுமையாக போராடினர்.
ஆனாலும், அவர்களது பந்து சிதறவிட்டு சிறப்பான ரன் குவிப்பில் இருவரும் ஈடுபட்டனர். இந்த ஜோடியில் ரோகித் 105 பந்துகளில் சதம் விளாசி மிரட்டினார். இதன் மூலம் தனது 33-வது சர்வதேச ஒருநாள் சதத்தை சிட்னி மண்ணில் விளாசினார் ரோகித். மேலும் ஆஸ்திரேலியாவில் அதிக சதம் விளாசிய வெளிநாட்டு வீரர் என்கிற பெருமையையும் பெற்றார். 33 போட்டிகளில் ரோகித் 6 சதங்களையும், 32 போட்டிகளில் கோலி 5 சதங்களையும் அடித்துள்ளனர்.
அபார வெற்றி
தொடர்ந்து ரோகித் - கோலி ஜோடி இணைந்து ஆட்டத்தை முடித்து வைத்த நிலையில், 38.3 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. தொடரின் நாயகன் மற்றும் ஆட்டத்தின் நாயகன் விருதை ரோகித் வென்று அசத்தினார். ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்கிற கணக்கில் தொடரை இழந்து இருந்தாலும், முன்னணி வீரர்களான ரோகித் மற்றும் கோலி தங்களது ஃபார்மை மீட்டு எடுத்து சிறப்பாக பேட்டிங் ஆடியதும் அணியை வெற்றி பெற செய்ததும் இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
இந்த தொடரைத் தொடர்ந்து, இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் வருகிற 29 ஆம் தேதி புதன்கிழமை முதல் தொடங்கி நடக்கிறது. இதில் முதலாவது போட்டி கான்பெர்ரா நகரில் இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு தொடங்குகிறது.
- Oct 25, 2025 15:54 IST
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் விளையாடிய இந்தியா ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 38.3 ஓவர்களில் 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- Oct 25, 2025 15:53 IST
ரோகித் - கோலி மிரட்டல் அடி - ஆஸ்திரேலியாவை சாய்த்த இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை துரத்திய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 24 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு களத்தில் இருந்து சிறப்பாக ஆடிய ரோகித் - கோலி ஜோடி இலக்கை எட்டிப்பிடித்து அசத்தியது. சதம் விளாசி மிரட்டிய ரோகித் 121 ரன்களும், அரைசதம் அடித்து அசத்திய கோலி 74 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
- Oct 25, 2025 15:48 IST
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சாதனை!
ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக ஓ டி ஐ சதங்கள் (9) விளாசிய சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன்செய்தார் ரோகித் சர்மா.
- Oct 25, 2025 15:40 IST
சாதனை படைத்த ரோகித் சர்மா!
ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ஓ டி ஐ சதங்கள் (6) அடித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா; அவருக்கு அடுத்த இடத்தில் 5 சதங்களுடன் விராட் கோலி மற்றும் குமார் சங்ககரா நீடிக்கின்றனர்
- Oct 25, 2025 15:31 IST
சதம் விளாசிய ரோகித் மிரட்டல் - வெற்றியை நோக்கி இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை துரத்தி வரும் இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 24 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் ஆடிய வரும் ரோகித் - கோலி ஜோடி அதிரடியாக மட்டையை சுழற்றி வருகிறார்கள். இந்த ஜோடியில் 105 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் சதம் விளாசி மிரட்டி இருக்கிறார்.
36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவின் வெற்றிக்கு 84 பந்துகளில் 24 ரன்கள் தேவை.
- Oct 25, 2025 15:14 IST
ரோகித் - கோலி அதிரடி பேட்டிங்... வெற்றியை நோக்கி இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை துரத்தி வரும் இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 24 ரன்னில் கில் ஆட்டமிழந்தார். தற்போது களத்தில் ஆடிய வரும் ரோகித் - கோலி ஜோடி அதிரடியாக மட்டையை சுழற்றி வருகிறார்கள்.
32 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றிக்கு 42 ரன்கள் தேவை.
- Oct 25, 2025 13:54 IST
கில் அவுட்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை துரத்தி வரும் இந்திய அணியில் தொடக்க வீரர்களாக ரோகித் - கேப்டன் கில் களத்தில் மட்டையை சுழற்றிய நிலையில், 24 ரன்னில் கில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
- Oct 25, 2025 13:21 IST
ரோகித் அதிரடி - இந்தியாவுக்கு சிறப்பான தொடக்கம்
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை துரத்தி வரும் இந்திய அணியில் தொடக்க வீரர்களான ரோகித் - கேப்டன் கில் களத்தில் மட்டையை சுழற்றி வருகிறார்கள்.
5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்துள்ளது.
- Oct 25, 2025 12:42 IST
இந்திய அணிக்கு 237 ரன்கள் இலக்கு
சிட்னியில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 46.4 ஓவர்களில் 236 ரன்கள் எடுத்தது. இதன் மூலம், இந்திய அணிக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்! மார்னஸ் லபுஷேன் 56, மிட்செல் மார்ஷ் 41 ரன்கள் எடுத்தனர்!
- Oct 25, 2025 09:10 IST
ஆஸ்திரேலிய அணி பேட்டிங்; இந்தியா பவுலிங்
தொடர்ந்து 18-வது முறையாக ஒருநாள் போட்டிகளில் டாஸை தோற்கிறது இந்திய அணி. 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அர்ஷ்தீப் சிங், நிதிஷ் ரெட்டிக்கு மாற்றாக குல்தீப், பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- Oct 25, 2025 08:38 IST
இந்தியா-ஆஸ்திரேலியா அணி வீரர்களின் விவரம்
இந்தியா: சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், அக்ஷர் பட்டேல், லோகேஷ் ராகுல், வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா அல்லது பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மேத்யூ ஷார்ட், மேத் ரென்ஷா, அலெக்ஸ் கேரி, கனோலி, மிட்செல் ஓவன், சேவியர் பார்லெட், மிட்செல் ஸ்டார்க் அல்லது ஜேக் எட்வர்ட்ஸ், ஆடம் ஜம்பா, நாதன் எலிஸ் அல்லது ஹேசில்வுட்.
- Oct 25, 2025 08:38 IST
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த் மற்றும் அடிலெய்டில் நடந்த முதல் இரு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்னியில் (இந்திய நேரப்படி) இன்று காலை 9 மணிக்கு (சனிக்கிழமை) நடக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us