scorecardresearch

‘கோலிக்கு ஒரு நியாயம், ரோகித்து வேற நியாயமா?’: அம்பயர் நிதின் மேனனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

கோலி என்றால் வேண்டுமென்றே அவுட் கொடுப்பதும், ரோகித் சர்மா என்றால் அவுட் என்றாலும் நாட் அவுட் கொடுத்தும் வருகிறார் நிதின் மேனன் என ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.

Ind vs aus 3rd Test: 'Gets Kohli Out, Saves Rohit': Fans Lash Out at Nitin Menon Tamil News
Umpire Nitin Menon blasted for being 'biased' towards Virat Kohli, 'saving' Rohit Sharma in IND vs AUS 3rd Test Tamil News

IND vs AUS 3rd Test; Rohit Sharma, Virat Kohli, Umpire Nitin Menon Tamil News: பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி மத்திய பிரதேசம் மாநில இந்தூரில் இன்று முதல் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆல்-அவுட் ஆகி 109 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

‘கோலிக்கு ஒரு நியாயம், ரோகித்து வேற நியாயமா?’: அம்பயர் நிதின் மேனனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

இந்நிலையில், இந்தப் போட்டியில் கள நடுவராக செயல்பட்டு வரும் நடுவர் நிதின் மேனன் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், பெரும் சர்ச்சையே வெடித்துள்ளது. இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டார்க்கிடம் சிக்கி ரோகித் சர்மா அவுட்டாகியிருக்க வேண்டும். குட் லெந்தில் போடப்பட்ட அந்த பந்தை ரோகித் விரட்ட முயலுகையில் பந்து எட்ச் ஆகி கேட்ச் ஆனது. இதற்கு ஆஸ்திரேலிய அணியினர் அவுட் என அப்பீல் செய்ய, கள நிதின் மேனன் இல்லை என்று தவிர்த்தார். தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இல்லாத ஆஸ்திரேலிய வீரர்கள் டிஆர்எஸ் எடுக்க தவறினர். உண்மையில், ரோகித் அவுட் என்று காட்டப்பது.

அதே ஓவரின் 4வது பந்திலும் ரோகித் அவுட்டாகியிருக்க வேண்டும். இன் ஸ்விங்காகி வந்த பந்தை ரோகித் தவறவிட எல்.பி.டபள்யூ ஆனார். இதற்கும் அவுட் என அப்பீல் கேட்க நிதின் மேனன் மறுத்துவிட்டார். இந்த முறையும் நீண்ட ஆலோசனை செய்த ஆஸ்திரேலிய வீரர்கள், ரிவ்யூவ் கேட்கவில்லை. இறுதியில் பந்து எல்.பி.டபள்யூ-வுக்கு சென்றது அப்பட்டமாக தெரிந்தது.

நாதன் லியான் ஜடேஜாவுக்கு வீசிய 10வது ஓவரின் 4வது பந்து, ஜடேஜாவின் பேட்டில் பட்டதை நன்கு உணர்ந்தும் எல்.பி.டபிள்யூ அவுட் கொடுத்தார் நிதின் மேனன். பிறகு ஜடேஜாவால் ரீவியூ எடுக்கப்பட்டு, அவர் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இப்போட்டியில், விராட் கோலிக்கு கொடுக்கப்பட்ட எல்.பி.டபிள்யூ அவுட் மட்டுமே அவர் கொடுத்த சரியான அவுட் ஆகும்.

இருப்பினும், டெல்லியில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியின் பேட்டிலும், பேடிலும் ஒரே நேரத்தில் பந்து பட்ட போது நிதின் மேனன் அவுட் எனக் கொடுத்தது சர்ச்சையானது. இதனால், கோலி என்றால் வேண்டுமென்றே அவுட் கொடுப்பதும், ரோகித் சர்மா என்றால் அவுட் என்றாலும் நாட் அவுட் கொடுத்தும் வருகிறார் நிதின் மேனன் என்றும், ‘கோலிக்கு ஒரு நியாயம், ரோகித்து வேறு நியாயமா?’ என்றும் கேள்வி எழுப்பியும், கடுமையாக விமர்சித்தும் வருகின்றார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs aus 3rd test gets kohli out saves rohit fans lash out at nitin menon tamil news

Best of Express