Advertisment

IND vs AUS 3rd Test: பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா : 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி. வெற்றி

பார்டர் - கவாஸ்கர் டிராபி கிரிக்கெட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IND vs AUS 3rd Test Live Score Updates in tamil

India vs Australia Live Scorecard, 3rd Test Day 1: Australia look for way back in the series after going 2-0 down.

India vs Australia 3rd Test Live Score Updates  in tamil: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.

Advertisment

இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று (புதன்கிழமை) முதல் இந்தூர் மைதானத்தில் நடக்கிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில்லும், முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளார்.

முதல்நாள் ஆட்டம் - இந்திய பேட்டிங்:

இந்திய அணியில் தொடக்க வீரரர்களாக கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி களமிறங்கினர். இதில், தலா 3 பவுண்டரியை விரட்டிய ரோகித் 12 ரன்னிலும், சுப்மன் கில் 21 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த புஜாரா ஒரு ரன்னிலும், ஜடேஜா 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கோலியுடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் அய்யர் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினார்.

சிறிது நேரம் தாக்குப்பிடித்து கோலி - ஸ்ரீகர் பரத் ஜோடியில் கோலி 22 ரன்னில் அவுட் ஆனார். ஸ்ரீகர் பரத் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர்களுக்குப் பிறகு வந்தவர்களில் அஸ்வின் 3 ரன்னிலும், 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட உமேஷ் யாதவ் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிராஜ் பூஜ்ஜிய ரன்னில் ரன் ஆக இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அக்சர் படேல் 12 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 109 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேத்யூ குனிமான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாதன் லயன் 3 விக்கெட்டுகளையும், டுடி மொர்பி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

முதல்நாள் ஆட்டம்: ஆஸ்திரேலியா பேட்டிங்

தொடர்ந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் உஸ்மன் குவாஜா - டிரவெஸ் ஹெட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியில் டிரவெஸ் ஹெட் 9 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 31 ரன்னிலும், அரைசதம் விளாசிய தொடக்க வீரர் உஸ்மன் குவாஜா 60 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 26 ரன்கள் எடுத்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கீப்பர் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இந்த 4விக்கெட்டுகளையும் இந்தியாவின் ஜடேஜா தான் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

publive-image

பீட்டர் கென்ஸ்ட்காம் 7 ரன்னுடனும், கமரூன் கிரீன் 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி இந்தியாவை விட 47 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா 197 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 22 ரன்னுக்கு ஒரு விக்கெட்-ஐ இழந்துள்ளது. தற்போது 113 ரன்னுக்கு 5 விக்கெட்-ஐ இழந்தது. தற்போது, இந்தியா 142 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 51 ரன்னுடன் புஜாரா களத்தில் உள்ளார். இந்தியா 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து, 163 ரன்னில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு 76 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து 76 ரன்கள் வெற்றி இலக்குடன் 3-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ரன்கணக்கை தொடங்கும் முன்பே உஸ்மான் கவாஜா விக்கெட்டை இழந்தது. ஆனாலும் அடுத்து களமிறங்கிய மார்கஸ் லபுனேசன் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட்டுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்பாடுத்தினார்.

இந்த கூட்டணி இந்திய பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு ரன்கள் சேர்ந்த நிலையில், இவர்களை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசிவரை முயற்சி செய்தனர். ஆனாலும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர்கள் 2-வது விக்கெட்க்கு 78 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர். 18.5 ஓவர்கள் ஆஸ்திரேலியா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டிராவிஸ் ஹெட் 49 ரன்களுடனும், லபுனேசன் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் –கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. முதல் 2 போட்டிகள் இந்திய அணி வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி போட்டி வரும் மார்ச் 5-ந் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.

இரு அணியின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஷ் அய்யர், ஜடேஜா, ஸ்ரீகர் பரத், அக்சர் படேல், ரவிசந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

ஆஸ்திரேலியா: உஸ்மன் குவாஜா, டிரவெஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் கென்ஸ்ட்காம், கமரூன் கிரீன், அலெக்ஸ் கார்னி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், டுடி மொர்பி, மெதிவ் குஹ்னிமென்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Rohit Sharma Cricket Indian Cricket Team Kl Rahul Indian Cricket Shubman Gill Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment