India vs Australia, KL Rahul – Shubman Gill Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதலிரண்டு போட்டிகளிலும் அபார வெற்றியை ருசித்த இந்தியா 3வது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுவதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது.
இந்தப் போட்டி முதலில் தரம்ஷாலாவில் விளையாட திட்டமிடப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றப்பட்டது. போட்டியானது ஏற்கனவே குறிப்பிட்ட அதே தேதியில் (மார்ச் 1ம் தேதி) தொடங்க உள்ளது. இந்த நீண்ட இடைவெளியில், ஆஸ்திரேலியாவுக்கு நிறைய யோசிக்க நேரம் இருக்கிறது. அதே நேரத்தில், இந்தியா வசதியான இடத்தில் உள்ளது.
ஆனால், இந்திய அணிக்கு ஒரே ஒரு பின்னடைவாக கே.எல் ராகுல் பார்க்கப்படுகிறார். வெளிநாட்டு தொடர்களில் அதிரடியாக விளையாடிய அவர் கடந்த சில வருடங்களாக தனது ஃபார்மை மீட்டெடுக்க திணறி வருகிறார். அவர் ஒவ்வொரு வடிவத்திலும் போராடி வருகிறார் என்பதும் இங்கு மேற்கோள் காட்டிப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. அவரது தனது ஃபார்மில் இல்லாதது, தற்போது நடந்து வரும் டெஸ்ட் தொடரில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராகுல் தனது கடைசி 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் ஆட்டமிழந்து வெளியேறுவதற்கான வினோதமான வழிகளையும் கண்டுபிடித்துள்ளார். இந்த ஆஸ்திரேலியா தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால், பலரும் அவரது தேர்வு குறித்து கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், ராகுல் சேர்க்கப்பட்டதற்கு தேர்வாளர்களை வெளிப்படையாக குற்றம் சாட்டி வருகிறார். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் கேஎல் ராகுலை ஆதரித்தாலும், கவனிக்கப்பட வேண்டிய ஒரு புதிர் உள்ளது.

சில நேரங்களில், ஒரு அணியில் உள்ள ஒரு வீரரின் தோல்வி, மற்றொரு வீரர் உருவெடுக்க வழிவகுக்கும். அவ்வகையில் பெஞ்சில் அமர்ந்திருக்கும் ஷுப்மான் கில் ராகுலின் இடத்தை நிரப்பும் சரியான வீரராக இருக்கிறார். அவர் கடந்த இரண்டு மாதங்களில் அனைத்து வடிவங்களிலும் சதம் விளாசி ரன்களை குவித்துள்ளார். ஆனால் கேஎல் ராகுலுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டதால் அவர் அணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் அனைத்து வடிவங்களிலும் கில் 5 சதங்கள் அடித்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிராக அவர் விளையாடிய கடைசி டெஸ்டில் அவர் சதம் அடித்தார்.
ஷுப்மான் கில்லின் கடைசி 10 இன்னிங்ஸ்:
126* vs நியூசிலாந்து (டி20)
11 vs நியூசிலாந்து (டி20)
7 vs நியூசிலாந்து (டி20)
112 vs நியூசிலாந்து (ஒருநாள்)
40* vs நியூசிலாந்து (ஒருநாள்)
208 vs நியூசிலாந்து (ஒருநாள்)
116 vs இலங்கை (ஒருநாள்)
21 vs இலங்கை (ஒருநாள்)
70 vs இலங்கை (ஒருநாள்)
46 vs இலங்கை (டி20)

நியூசிலாந்து தொடரில் அதிக ரன்கள் எடுத்திருந்தாலும், கில் போன்ற ஒரு இளைஞருக்கு இது நியாயமற்றது. குறிப்பாக, அவர் தரமான ஃபார்மில் இருக்கும்போது, வாய்ப்புகள் மறுக்கப்படுவது சரியற்றது. கில் தனது கடைசி பத்து சர்வதேச இன்னிங்ஸ்களில் அனைத்து வடிவங்களிலும் 4 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது நிச்சயமாக அவருக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும்.
3வது டெஸ்ட் போட்டி நடக்கும் இந்தூரில் ஒரு மாதத்திற்கு முன்பு, இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடினர். அந்த போட்டியில் கில் 78 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். அவர்கள் மீண்டும் இந்தூருக்குத் திரும்பும்போது, கில்லுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறார்.

கே.எல் ராகுல் தற்போது அணிக்கு உதவவில்லை. டெல்லி டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் உஸ்மான் கவாஜாவை ஆட்டமிழக்கச் செய்தததே தொடரில் அவர் இதுவரை செய்த ஒரே நல்ல விஷயம். அவர் தன்னம்பிக்கை இல்லாதவராகவும், ரன்களை எடுக்க முடியாமல் திணறுவதாகவும், வெறும் பேட்டை சுழற்றுவது போலும் தெரிகிறது. இதற்கு மத்தியில், அவரை 3வது போட்டியில் இருந்து கழற்றிவிடுவது குறித்து இந்திய அணி தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் இது யாருக்கும் உதவாது.
ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் ஆதரவுச் செய்தி மிகவும் அருமையாக உள்ளது மற்றும் அவரது லீன் பேட்ச் மூலம் ஒரு வீரரை ஆதரிப்பதில் தவறில்லை. ஆனால் அது ஷுப்மானுக்கு நியாயமானதாக செய்யவில்லை. எனவே, 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக அணி நிர்வாகம் எப்படி அணுகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil