scorecardresearch

Ind vs Aus 4th Test Day 1, STUMPS : சதம் அடித்து அசத்திய புஜாரா; இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் குவிப்பு

71 ஆண்டுகளாக நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்துமா இந்தியா…

Ind vs Aus 4th Test Day 1 Live Cricket Score
Ind vs Aus 4th Test Day 1 Live Cricket Score

Ind vs Aus 4th Test Day 1 Live Cricket Score : இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று சிட்னியில் ஆரம்பமாகியுள்ளது.

4 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை ட்ரா செய்தால் இந்தியா புதிய வரலாற்று சாதனையை படைக்கும். ஆனால் தொடரையே ட்ரா செய்யும் முனைப்பில் விளையாட களம் இறங்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி.

Ind vs Aus 4th Test Day 1 Live Cricket Score :

1:05 PM:  புஜாராவின் ரன் வேட்டை! 

12:35 PM: Stumps –  முதல் நாள் ஆட நேர முடிவில் இந்தியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 303 ரன்கள் எடுத்துள்ளது.  சேடேஸ்வர் புஜாரா டெஸ்ட் அரங்கில் தனது 18வது சதத்தையும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 3வது சதத்தையும் நிறைவு செய்ததன் மூலம்ஆஸ்திரேலியாவில் அதிகம் சதம் அடித்த இந்தியர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.  ராகுல் 9 ரன்னில் ஆட்டம் இழக்க, அகர்வால் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்பு புஜாராவும் கோலியும் களத்தில் இருந்தனர்.

தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. கோலி 23 ரன்களில் வெளியேறினார். தற்போது தன்னுடைய நான்காவது விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா. அஜின்க்யா ரஹானே, 55 பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

சதம் அடித்த புஜாரா

இந்த தொடரில் தன்னுடைய மூன்றாவது சதத்தை அடித்து அசத்தினார் புஜாரா. டெஸ்ட் தொடரில் தன்னுடைய 18வது சதத்தினை அடித்துள்ளார் புஜாரா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புஜாரா மற்றும் விஹாரி களத்தில் உள்ளனர்.

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs aus 4th test day 1 live cricket score india vs australia live score online