scorecardresearch

IND vs AUS: டிரா-வில் முடிந்த 4வது போட்டி… தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்

4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

IND vs AUS: டிரா-வில் முடிந்த 4வது போட்டி… தொடரை கைப்பற்றி இந்தியா அசத்தல்
IND vs AUS Live Scorecard, 4th Test Day 5: Indian players celebrate the wicket of Matthew Kuhnemann. (Express photo by Nirmal Harindran)

India vs Australia, 4th Test Match Highlights in tamil: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Border-Gavaskar Trophy, 2023Narendra Modi Stadium, Ahmedabad   31 March 2023

India 571 (178.5)

vs

Australia   480(167.2)& 175/2(78.1)

Match Ended ( Day 5 – 4th Test ) India drew with Australia

இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை (9ம் தேதி) தொடங்கியது.

மைதானத்தில் 2 நாட்டு பிரதமர்கள்

இந்த டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் ஆகியோர் வந்தனர். இரு நாட்டு பிரதமர்களின் வருகையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரு நாட்டு தலைவர்களும் தங்களது நாட்டு கேப்டனுடன் அணியில் உள்ள வீரர்களை சந்தித்தனர். இரு பிரதமர்களும் போட்டியை அரை மணித்திற்கு மேலாக கண்டுகளித்தனர்.

முதல் நாள் ஆட்டம்: ஆஸ்திரேலிய பேட்டிங்

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் உஸ்மான் கவாஜா களமிறங்கினர். இந்த ஜோடி சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தது. எனினும், அஸ்வின் வீசியது 15.3 வது ஓவரில் பெரிய ஷாட் ஆட முயன்ற டிராவிஸ் ஹெட் ஜடேஜா வசம் கேட்ச் கொடுத்து 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த மார்னஸ் லாபுசாக்னே 3 ரன்னிலும், கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 38 ரன்னிலும், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிவு இருந்தாலும், மறுபுறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா அரைசதம் அடித்தார். தொடர்ந்து வந்த கேமரூன் கிரீன் கவாஜா உடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடியில் கிரீன் களமிறங்கியது முதலே அதிரடியாக மட்டையை சுழற்றினார். பவுண்டரிகளை ஓட விட்டு இந்திய வீரர்களை திணறடித்தார். அவருடன் ஈடுகொடுத்து பந்துகளை விரட்டியடித்த கவாஜா பவுண்டரியை விரட்டி சதம் விளாசினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்களை குவித்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் கிரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

2ம் நாள் ஆட்டம்: ஆஸ்திரேலியா பேட்டிங்

2ம் நாள் ஆட்டத்தின் போது களத்தில் இருந்த உஸ்மான் கவாஜா – கேமரூன் கிரீன் ஜோடி முந்தைய நாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கினர். அரைசதம் விளாசிய கிரீன் சதம் அடித்தார். இந்த ஜோடியை உடைக்க இந்திய அணி நீண்ட நேரம் திணறியது. அவர்களும் பொறுமையாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து, வீரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினர்.

இதன்பின்னர், மத்திய உணவு இடைவேளைக்குப்பின் 2வது செஷனில் அனைவரும் எதிர்பார்த்த சம்பவத்தை நிகழ்தினார் அஸ்வின். அவர் 114 ரன்கள் வரை சேர்த்த கிரீனை ஆட்டமிழக்க செய்தார். அவரைத் தொடர்ந்து வந்த அலெக்ஸ் கேரியும் அதே ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்து பூஜ்ஜிய ரன்னுடன் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபுறம் நங்கூரம் போல் நின்று நிதான பேட்டிங் செய்த உஸ்மான் கவாஜா, இரட்டை சதத்தை நெருங்கிய நிலையில் 180 ரன்கள் எடுத்து அக்சர் படேல் சுழலில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த நாதன் லயன் 34 ரன்களும், மர்பி 41 ரன்களும் எடுத்து அணியில் ஸ்கோர் உயர உதவினர். இறுதியில், 167.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தியா பேட்டிங்:

தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்னும், சுப்மன் கில் 18 ரன்னும் எடுத்த நிலையில், 2ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய அணி 2ம் நாள் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்துள்ளது. 444 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி நாளை 3ம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாட உள்ளது.

3ம் நாள் ஆட்டம் – இந்தியா பேட்டிங்

3ம் நாள் ஆட்டம் தொடங்கிய போது களத்தில் இருந்த இந்திய தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் – கில் ஜோடி ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த ஜோடியில் ஒரு சிக்ஸர் 3 பவுண்டரிகளை விரட்டிய ரோகித் 35 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா 42 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனிடையே, தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் விளாசினார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவருக்கு இது 2வது சதமாகும்.

தொடர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி வந்த அவர் 235 பந்துகளில் 12 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 128 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவருடன் களத்தில் இருந்த விராட் கோலி ஜடேஜாவுடன் ஜோடியில் இணைந்தார். இந்த ஜோடியில் கோலி அரைசதம் அடித்தார். கோலி 59 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் நிற்க, 3ம் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது.

இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 289 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய அணியை விட இந்தியா 191 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

4ம் நாள் ஆட்டம் – இந்தியா பேட்டிங்

இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், களத்தில் இருந்த கோலி – ஜடேஜா ஜோடி சிறப்பாக மட்டையை சுழற்றினர். மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடியில், கவர் திசையில் பவுண்டரி பறக்க விட முன்யன்ற ஜடேஜா கேட்ச் கொடுத்து 28 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் கோலியுடன் ஜோடியில் இருந்த பாரத் 44 ரன்னில் அவுட் ஆனார். அவருக்குப் பின்னர் வந்த அக்சர் படேல் கோலியுடன் சேர்ந்து வலுவான கூட்டணியை அமைத்தார். முன்னதாக, முன்னாள் இந்திய கேப்டன் கோலி 3 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் தனது 28 வது டெஸ்ட் சதத்தை விளாசினார். இது அவருக்கு 75 வது சர்வதேச சதமாக அமைந்தது. கோலியுடன் ஜோடியில் இருந்த அக்சர் நிதானமாக மட்டையைச் சுழற்றி வந்தாலும், அவ்வப்போது பவுண்டரி சிக்ஸர்களை பறக்க விட்டு அதிரடி காட்டினார். அத்துடன் அரைசதத்தையும் பதிவு செய்து மிரட்டினார்.

தனது அதிரடியால் தொடர்ந்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை மிரட்டி வந்த அவர் 113 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்ஸர்களை விளாசி 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து வீரர்களில் அஸ்வின் 7 ரன்னிலும், உமேஷ் யாதவ் ரன்அவுட் ஆகியும் ஆட்டமிழந்தனர். முர்பி வீசிய 178.5 ஓவரில் வலைத்து அடிக்க முற்சியைப் போட்ட கோலி டாப் எட்ஜ் ஆகி டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் அவுட் ஆனார். முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்களையும் (ஷ்ரேயாஸ் ஐயர் காயம்) இழந்த இந்தியா 571 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக முர்பி மற்றும் லியான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

2வது இன்னிங்சில் விளையாட களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான மேத்யூ குஹ்னெமன் (0) – டிராவிஸ் ஹெட் 3 ரன்கள் களத்தில் இருந்தனர்.

5ம் நாள் ஆட்டம் – ஆஸ்திரேலியா பேட்டிங்

இன்று 5ம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்தது. ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 90 ரன்களும், மார்னஸ் லாபுசாக்னே 63 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய அணி தொடர்ந்து போராடியது. ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் அக்சர் படேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

தொடரை வென்ற இந்தியா

இந்த ஆட்டம் டிராவில் முடிந்த நிலையில், 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையில், இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட் வித்தியாசத்தில் நியூலாந்து வெற்றி பெற்ற நிலையில், புள்ளிகள் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது. வருகிற ஜூன் 7 ஆம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடந்துகின்றன.

இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட், அகமதாபாத்: இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், டோட் மர்பி, மேத்யூ குஹ்னெமன், நாதன் லியான்

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs aus 4th test live score updates in tamil

Best of Express