Advertisment

Ind vs Aus 4th Test: ஷமி, இஷான் கிஷன் உள்ளே… சிராஜ், பாரத் வெளியே; இந்தியா ஆடும் லெவன் இழுபறி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டில் முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

author-image
WebDesk
New Update
IND Vs AUS 4th Test Playing XI tip-off in tamil

India vs Australia 4th Test tip-off XI: Mohammed Shami (left) and Ishan Kishan are likely to play in the fourth Test.

 IND vs AUS Ahmedabad Test, India Playing XI Tamil News: இந்திய மண்ணில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

Advertisment

இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உள்ளது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை, 9ம் தேதி) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னேற இப்போட்டி முக்கியம் வாய்ந்தது என்பதால் இந்திய அணி தீவிரமாக செயல்பட தயாராகி வருகிறது.

அதேவேளையில், கடைசிப் போட்டியையும் கைப்பற்றி தொடரை சமன் செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டு வருகிறது. இதனிடையே, போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீசும் வருகை தருகிறார்கள். இதனால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

இந்தியா ஆடும் லெவன் இழுபறி

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டெஸ்டில் ஆடும் லெவனில் இந்திய அணி சில மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கபடுகிறது. மறுபுறம், இந்தூரில் அபார வெற்றி பெற்ற பிறகு, ஆஸ்திரேலிய அணி விளையாடும் லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ் அகமதாபாத் டெஸ்டில் முகமது ஷமி மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் இந்தியாவின் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றது.

சிராஜுக்கு பதில் ஷமி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் 3வது டெஸ்ட் போட்டிகளில் ஓய்வில் இருந்த முகமது ஷமி, 4வது டெஸ்டில் முகமது சிராஜுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படலாம். கடந்த ஆண்டில் 3 வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடிய சிராஜுக்கு பணிச்சுமையைக் குறைக்கலாம். இந்தூர் டெஸ்டில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய உமேஷ் யாதவ், லெவன் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்வார். ஷமி, முதல் இரண்டு டெஸ்டில், ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். எனவே, வேகப்பந்துவீச்சு வரிசையை ஷமி வழிநடத்துவார்.

கே.எஸ்.பாரத்துக்கு பதில் இஷான் கிஷன்

கே.எஸ்.பாரத் மூன்று டெஸ்ட்களிலும் சிறப்பான விக்கெட் கீப்பிங் செய்தார். ரேங்க் டர்னர்களில் அவர் ஓரிரு கேட்சுகளை கைவிட்டாலும், 100 சதவீதம் கேட்சுகளை பிடித்து தள்ளுவது என்பது கடினமான ஒன்றுதான். எனினும், பாரத் பேட்டிங்கில் மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவர் தனது பேட்டிங் திறனை வெளிப்படுத்த நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைத்த போதும் அதை தவற விட்டார். டெல்லியில் கேமியோ ரோல் செய்த அவர் தொடர்ந்து தாக்குப்பிடித்து விளையாட போராடினார். இருப்பினும், பெரும்பாலான இந்திய டாப் ஆடர் பேட்டர்கள் போராடியதால், பாரத் அவரது பேட்டிங்கிற்காக அவரை மதிப்பிடுவது கடினமாக இருக்கும்.

மறுபுறம், இஷான் கிஷன் இனி ரிஷப் பண்டிற்கு மாற்றாக இருக்கலாம். மற்றொரு ரேங்க்-டர்னர் இருந்தால், இஷான் தனது விரைவு கேமியோ மூலம் விளையாட்டின் காட்சியை மாற்றுவதற்கு ஒரு சிறந்த பேட்டராக இருப்பார். ஜார்கண்ட் அணிக்காக தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வரும் இஷான், டர்னர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவராகவும் இருக்கிறார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா அகமதாபாத் டெஸ்ட்: இந்தியாவுக்கு கூடுதல் பேட்ஸ்மேன் தேவையா?

இந்தியா இதுவரை 6 ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் மற்றும் மூன்று ஆல்ரவுண்டர்களுடன் விளையாடியுள்ளது. ஆனால் ஆடுகளம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களை தொடர்ந்து பயன்படுத்தப்படாமல் இருப்பதால், கூடுதல் பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க வேண்டிய கருத்து இருக்கிறது.

மேலும், இந்தியாவின் டாப் ஆடர் பேட்ஸ்மேன்கள் தங்களது சொந்த மண்ணிலே ரன்களை குவிக்க திணறி வருகின்றனர். மேலும், சுழலுக்கு எதிராகவும் போராடியுள்ளனர். கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவர் மட்டுமே 30+ சராசரியை கடந்த 2 இந்திய வீரர்களாக இருக்கின்றனர். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் அரைசதம் விளாசினாலும், அவர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அக்சர் படேல் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை என்றாலும், லோயர் ஆடரை தாங்கிப் பிடிப்பாராக இருக்கிறார். எனவே, அவர் ஆடும் லெவனில் தொடருவார். முகமது சிராஜ்-க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் முகமது ஷமி அவரது இடத்தில் களமாடுவார். ஆனால், உமேஷ் யாதவின் இடத்தில் கூடுதல் பேட்ஸ்மேனை சேர்க்கலாம். அப்படியானால், மிடில் ஆர்டரில் அதிரடியாக மட்டையைச் சுழற்றும் சூரியகுமார் யாதவை இந்தியா சேர்க்கலாம்.

ஆஸ்திரேலிய அணியில் மாற்றமில்லை; மீண்டும் வழிநடத்தும் ஸ்மித்

அகமதாபாத்தில் நடைபெறும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருப்பார் என ஆஸ்திரேலியா நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கடந்த மாதம் டெல்லியில் நடந்த இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு சொந்த நாடு திரும்பிய பேட் கம்மின்ஸ், சிட்னியில் தனது தாய் மரியா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நோய்த்தடுப்பு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், குடும்பத்தினருக்கு ஆதரவாக அங்கே தங்கி இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் முழுநேர கேப்டனாக தனது காலம் முடிந்துவிட்டதாக எண்ணிய ஸ்மித், இந்தூரில் நடந்த மூன்றாவது டெஸ்டில் தனித்துவத்துடன் செயல்பட்டு அணியை இந்திய மண்ணில் வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். அந்த அணி தரப்பில் சுழலில் மிரட்டி வரும் சுழற்பந்து வீச்சாளர்கள் நாதன் லியான், டோட் மர்பி மற்றும் மாட் குனேமேன் ஆகியோர் தலா ஒரு 5 விக்கெட்டுகளை (ஃபிஃபர்) வீழ்த்தி அசத்தியுள்ளனர். எனவே, அகமதாபாத் ஆடுகளத்திலும் அதே உத்வேகத்துடன் வீசுவார்கள்.

இந்தியா vs ஆஸ்திரேலியா அகமதாபாத் டெஸ்ட்: இரு அணிகளின் உத்தேச லெவன் வீரர்கள் பட்டியல்:

இந்தியா:

ஷுப்மன் கில், ரோஹித் சர்மா (கேப்டன்), செஸ்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஆர் அஷ்வின், அக்சர் படேல், உமேஷ் யாதவ் (அல்லது) சூர்யகுமார் யாதவ், முகமது ஷமி

ஆஸ்திரேலியா:

உஸ்மான் குவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், டாட் மர்பி, மேத்யூ குஹ்னேமன்

இந்தியா vs ஆஸ்திரேலியா அகமதாபாத் டெஸ்ட்: இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:

ஆஸ்திரேலிய அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மாட் குஹ்னெமன், மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷாமி, மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன்

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் , சூர்யகுமார் யாதவ், ஜெய்தேவ் உனட்கட்

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெற https://t.me/ietamil

India Vs Australia Sports Rohit Sharma Cricket Ind Vs Aus Indian Cricket Team Ahmedabad Indian Cricket Steve Smith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment