scorecardresearch

IND vs AUS 4th Test: கையில் கருப்பு பட்டை அணிந்த ஆஸி,. வீரர்கள்… காரணம் இதுதான்!

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.

IND vs AUS 4th Test: Reason Aus cricketers wearing black armbands in Tamil
Reason behind Australian cricketers wearing black armbands against India in 4th Test of BGT 2023 Tamil News (Express Photo by Nirmal Harindran)

IND vs AUS 4th Test Tamil News: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட பாா்டா் – காவஸ்கா் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து டெல்லியில் நடந்த 2-வது டெஸ்டில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

பின்னர், இந்தூரில் நடந்த 3வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதனால், தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முதல் (வியாழக்கிழமை, 9ம் தேதி) தொடங்கியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

கேப்டன் கம்மின்ஸ் தாயார் மரணம்

இந்நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் சிட்னியில் இன்று காலமானார். மரியா கம்மின்ஸ் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் கடந்த மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனால் குடும்பத்திற்கு ஆதராக இருக்க கேப்டன் கம்மின்ஸ் இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்குப்பின் சொந்த நாடு திரும்பினார்.

இந்த நிலையில், பேட் கம்மிஸின் தாயார் மரியா கம்மின்ஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “மரியா கம்மின்ஸ் ஒரே இரவில் காலமானதில் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சார்பாக, பேட் கம்மின்ஸ் குடும்பத்தினர் மற்றும் அவர்களது நண்பர்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பேட் கம்மின்ஸின் தாயாரின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த இக்கட்டான காலகட்டத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன.” என்று கூறியுள்ளது.

கருப்பு பட்டை அணிந்து ஆடும் ஆஸி,. வீரர்கள்

இந்நிலையில், பேட் கம்மின்ஸின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இன்று நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.

“ஆஸ்திரேலிய ஆடவர் அணி இன்று மரியாதை நிமித்தமாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடவுள்ளது.” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், 3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிகளுக்கு ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்தி வருகிறார். இதில் 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ind vs aus 4th test reason aus cricketers wearing black armbands in tamil