சிட்னியில் தேசிய கீதம் பாடிய போது உணர்ச்சி வசப்பட்ட சிராஜ்: வீடியோ

கடந்த 7 ஆண்டுகளில் அறிமுக வீராக களமிறங்கிய எந்த இந்திய வீரரும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது.

ind vs aus at sydney ground during national anthem mohammed siraj gets emotional - சிட்னியில் தேசிய கீதம் பாடிய போது உணர்ச்சி வசப்பட்ட சிராஜ்: வீடியோ

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான 3வது  டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி  மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. போட்டியின் தொடக்கத்தில் இரு நாடுகளின் தேசிய கீதமும் பாடப்படும். அப்படி இந்திய அணியின் தேசிய கீதம் பாடப்பட்ட போது   அறிமுக வீரரான முகமது சிராஜ் கண்கலங்கினார். அப்போது அவர் அருகில் நின்று கொண்டிருந்த வேகப் பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா ஆறுதல் கூறினார்.

ஆஸ்திரேலிய சுற்றுப்பயண தொடங்கும் போது சிராஜ்  அவருடைய தந்தை இழந்திருந்தார். காயம் காரணமாக  வேகப் பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. எனவே 2வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்கினார். கடந்த 7 ஆண்டுகளில் அறிமுக வீராக களமிறங்கிய எந்த இந்திய வீரரும் இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது கிடையாது.

அதோடு இன்று நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முதலில் பேட் செய்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாஅணி,  இதுவரை 25 ஓவருக்கு 1 விக்கெட்டை இழந்து 56 ரன்களை சேர்த்துள்ளது. வார்னரின் அந்த முதல் விக்கெட்டை சிராஜ் தான் வீழ்த்தினார்.

2017 ஆம் ஆண்டு  நியூசிலாந்திற்கு எதிராக டி -20 நடந்தது. அதில்  முதல் போட்டியோடு  வேகப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.  அப்போது  மற்ற அணியுடன் வரிசையாக நின்றபோது பாடப்பட்ட தேசிய கீதத்தில்  சிராஜ்  உணர்ச்சி வசப்பட்டுள்ளார்.  பின்னர் நியூசிலாந்திற்கு எதிராக நடந்த 2 வது டி -20 போட்டியில்  வேகப் பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு பதிலாக அறிமுக வீரராக களம் இறங்கினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Sports news here. You can also read all the Sports news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ind vs aus at sydney ground during national anthem mohammed siraj gets emotional

Next Story
அறிமுக வீரராக நவதீப் சைனி சிட்னியில் அசத்துவாரா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express